Home சினிமா சிவகார்த்திகேயனை மாற்றிய படம்

சிவகார்த்திகேயனை மாற்றிய படம்

10
0
SHARE

வேலைக்காரன் வெற்றி சிவகார்த்திகேயனுக்குள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அவர் சில முடிவுகளை எடுத்திருக்கிறார்.

சிவகார்த்திக்கேயன் இனி விளம்பரங்களில் நடிப்பதில்லை என முடிவு எடுத்திருப்பதாக தெரிவித்தார். இது பற்றி அவர் கூறும் போது, “மோகன்ராஜாவின் தனி ஒருவன் பிடித்திருந்தது. அந்த சமயத்தில்தான் எனக்கு ஒரு படம் இயக்கி தருமாறு கேட்டுக் கொண்டேன்.

இப்போதுஎனக்குகிடைத்திருக்கும்இடம், கார், வீடு அனைத்துமே மக்கள் கொடுத்ததுதான். அவர்களுக்கு என்ன திருப்பிக் கொடுப்பது என்று தெரியவில்லை. அப்படி ஏதாவது திருப்பிக் கொடுக்க முடியும் என்றால் அது இந்தவேலைக்காரன்படமாக இருக்கும் என நினைக்கிறேன். இப்படத்தில் சில காட்சிகள் நடிக்கும்போது கண் கலங்கியிருக்கிறேன்.

இதற்கு முன்பு சில விளம்பரங்களில் நடிப்பதை தவிர்த்திருக்கிறேன். அதற்கு அந்தத் தருணத்தில் சந்தோஷப்பட்டேன். இப்போது சொல்கிறேன், இனிமேல் எந்த விளம்பரங்களிலும் நடிக்கப் போவதில்லை. ஏன் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது .

எனக்குள் இருக்கும் மனிதனிடம், இப்படம் நிறைய கேள்விகளை எழுப்பி இருக்கிறது. அதன் மூலம் சிறிது மாறியிருக்கிறேன்.” என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here