Home சினிமா விவேகம் விவகாரம்: தயாரிப்பாளர் கேள்வி

விவேகம் விவகாரம்: தயாரிப்பாளர் கேள்வி

39
0
SHARE

விவேகம் நாளுக்கு நாள் பல வசூல் சாதனைகளை படைத்து வருகின்றது. நெகட்டிவ் விமர்சனங்கள் படத்தின் வசூலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், இப்படத்திற்கு பல திரையரங்குகள் டிக்கெட் விலையை இஷ்டத்திற்கு நிர்ணயித்தனர், இதை கேள்வி கேட்ட ரசிகர்களிடம் மோதலில் ஈடுப்பட்டனர்.

இதனால், பிரபல் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கோபமாக சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதில் ‘முதலில் நடிகர்கள் சிஸ்டம் சரியில்லை என்று பேசுவதிற்கு முன்பு, உங்கள் படங்களின் டிக்கெட் விலையை குறைக்க சொல்லுங்கள்.

விவேகம் படத்திற்கு பல இடங்களில் அதிக தொகை வைத்து விற்று வருகின்றனர், ஆனால்,

என் திரையரங்கில் ரூ 100க்கு

தான் விற்றேன், 4 நாளும் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல் தான்.

மற்ற இடங்களில் ரூ 1000 வரைக்கு டிக்கெட் விற்கிறார்கள், அதையெல்லாம் தயாரிப்பாளர் சங்கம் கேள்வி கேட்காதா?, நடிகர்கள் என்றால் பயமா?’ என ஆதங்கப்பட்டுள்ளார்.