Home அரசியல் கர்நாடக தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பிரசாரம்?

கர்நாடக தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பிரசாரம்?

12
0
SHARE

பெங்களூரு, ஜன. 2&

கர்நாடக தேர்தலில் நடிகர் ரஜினியை பா... வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவைக்க முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகின.

கர்நாடக மாநில சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் அட்டவணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் தீவிர ஆலோசனையை தொடங்கி உள்ளது.

கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதில் பாரதீய ஜனதா கட்சி தீவிரமாக உள்ளது. ஆனால் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இதனால் கர்நாடகாவில் பா...&காங்கிரஸ் இடையே நேரிடை போட்டி உருவாகி உள்ளது.

விரைவில் இரு தரப்பினரும் அங்கு தேர்தல் பணிகளை தொட்ங்க உள்ளனர். இந்த நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசமும் கர்நாடக அரசியலில் எதிரொலிக்க தொடங்கி உள்ளது.

ரஜினி கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை தங்களுக்கு பக்கபலமாக மாற்ற பாரதீய ஜனதா கட்சி ஓசையின்றி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. ரஜினி ஆன்மீக அரசியலில் ஈடுபடப்போவதாக சொல்லியிருப்பதை பா... தலைவர்கள் தங்களுக்கு சாதகமாக மாற்ற முடியும் என்று நம்புகிறார்கள்.

இது தொடர்பாக தமிழக பா... தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:&

ரஜினியின் ஆன்மீக அரசியல் கொள்கையும் பாரதீய ஜனதா கட்சியின் கொள்கையும் ஒன்று தான். தமிழக அரசியலில் பழமை வாதிகளிடம் இருந்து மீட்டு ஆன்மீக அரசியலாக மாற்ற வேண்டும் என்ற தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்த இலக்குக்கு ரஜினியின் ஆன்மீக அரசியல் நிச்சயம் உதவியாக இருக்கும். ரஜினி எங்கள் பக்கம் வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

இவ்வாறு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

பா... மூத்த தலைவர்களில் சுப்பிரமணியசாமியை தவிர அனைவரும் ரஜினியை ஆதரிக்கிறார்கள். ரஜினியை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்பதற்காக இப்போதே வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

குறிப்பாக கர்நாடகா சட்ட சபைக்கு அவரது வாய்ஸ் கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here