Home இந்தியா புத்தாண்டு தினத்தில் இந்திய பங்கு சந்தைகள் சரிவு

புத்தாண்டு தினத்தில் இந்திய பங்கு சந்தைகள் சரிவு

12
0
SHARE

மும்பை, ஜன.2&

புத்தாண்டு தினத்தில் இந்திய பங்கு சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

2018 புத்தாண்டு தொடக்க நாளான நேற்று அமெரிக்காவிற்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.84 ஆக அதிகரித்தது. காலை 9.15 மணிக்கு தொடங்கிய அந்நிய செலாவணி பங்கு சந்தையில் அமெரிக்காவிற்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து 6..72 ஆக இருந்தது. இறுதியாக 11.15 மணியளவில் 12 காசுகள் உயர்ந்து 63.84 ஆக வர்த்தகம் ஆனது.

இந்திய பங்கு சந்தைகளை பொறுத்தமட்டில் துவக்கில் உயர்வாகவும், வர்த்தக நேர முடிவில் சரிவையும் சந்தித்தன. மும்பை பங்கு சந்தையை பொறுத்தமட்டில் 244.08 புள்ளிகள் சரிந்து 33,812.75 என்ற கணக்கில் வர்த்தகம் ஆனது. தேசிய பங்கு சந்தையை பொறுத்தவரை நிப்டி 95.15 புள்ளிகள் சரிவை சந்தித்து, 10,435.55 என்ற புள்ளிகள் கணக்கில் வர்த்தகம் ஆனது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here