Home இந்தியா ஐடியா நிறுவனத்துக்கு ரூ.3 கோடி அபராதம்

ஐடியா நிறுவனத்துக்கு ரூ.3 கோடி அபராதம்

18
0
SHARE

புதுடெல்லி, ஆக. 27& 2005ம் ஆண்டு முதல்

2007ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஐடியா நிறுவனம் கூடுதலாக தொகை வசூலித்தது தெரியவந்துள்ளது.

வாடிக்கையாளர்கள் விவரம் இல்லாததால், இத்தொகையை தொலைத் தொடர்பு நுகர்வோர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியத்தில் (டிசிஇபிஎப்) செலுத்துமாறு ஐடியா நிறுவனத்துக்கு டிராய் அறிவுறுத்தி உள்ளது.

2005ம் ஆண்டு தொலைத் தொடர்புத் துறை (டிஓடி) மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் ஆகிய 4 தொலைத் தொடர்பு வட்டங்களுக்கான உரிமத்தை வழங்கியது. இதனால் இப்பிராந்தியங்களில் சேவை கட்டணம் ஒரே அளவில் இருக்க வேண்டும். ஆனால் ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நெட்வொர்கில் பேசியதற்கு அதிக கட்டணம் வசூலித்துள்ளது. இரண்டு ஆண்டுகளில் ரூ. 2.97 கோடி அதிக தொகை வசூலித்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து டிராய் அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.