Home மற்றவை சென்னை புத்தாண்டு கொண்டாட்டத்தில் சிறு விபத்துகளை தவிர்த்து உயிரிழப்பு எதுவும் இல்லைகாவல்துறை விளக்கம்

சென்னை புத்தாண்டு கொண்டாட்டத்தில் சிறு விபத்துகளை தவிர்த்து உயிரிழப்பு எதுவும் இல்லைகாவல்துறை விளக்கம்

13
0
SHARE

சென்னை, ஜன.2&

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் சிறு விபத்துகளை தவிர்த்து, உயிரிழப்பு சம்பவம் ஏதும் இல்லை என காவல் துறை விளக்கம் கொடுத்துள்ளது.

சென்னை பெரு நகர காவல் துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

புத்தாண்டையட்டி டிசம்பர் 31ம் தேதி அன்று மாலை முதல் 1ம் தேதி காலை வரை , பல்லாயிரக்கணக்கான மக்கள் வெவ்வேறு இடங்களில் கூடுவதை முன்னிட்டு, குற்ற நடவடிக்கைகளை தவிர்க்கவும், விபத்தில்லா புத்தாண்டை உறுதி செய்வதற்காக , சென்னை பெருநகர காவல் துறையினர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பணிக்காக சுமார் 10 ஆயிரம் காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு விரிவான பாதுகாப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரீனா, சாந்தோம் , எலியட்ஸ் , பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை  ஆகிய பகுதிகளில் 368 காவல் சோதனை சாவடிகளும் , 25 காவல் உதவி மையங்களும் அமைக்கப்பட்டு புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. சென்னை பெருநகரின் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களை தடுக்கவும், பைக் ரேசில் ஈடுபடுபவர்களை தடுக்கவும் ,சிறப்பு வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது, பெரும் உதவியாக இருந்தன. 68 இடங்களில் ஒலி பெருக்கிகள் மூலம், விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், 126 இடங்களில், ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த வருடம், பாதுகாப்பு பணிக்காக நான்கு ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டு , கடற்கரை மற்றும் காமராஜர் சாலையும் கண்காணிக்கப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த ஆண்டு சிறப்பு நடவடிக்கையாக 36 இடங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை , மதுவின் பாதிப்பு நீங்கும் வரை, அமர செய்துவிட்டு , அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரைகள் கூறப்பட்டன.

இத்தகையை நடவடிக்கைகளால், இந்தாண்டு, விபத்துகளில் எந்தவித உயிரிழப்பும் இல்லை.மேலும், சிறு விபத்துகள் தொடர்பாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதற்கு பெரும் பாடுபட்ட காவல் துறையினர்,  ஒத்துழைப்பு கொடுத்த மக்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடக துறையினருக்கும் , சென்னை பெருநகர காவல் துறை பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here