Home விளையாட்டு சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு

சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு

24
0
SHARE

லண்டன், ஆக. 27& ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பிய கிளப் அணிகளில் விளையாடும் சிறந்த கால்பந்து வீரரை தேர்ந்தெடுத்து சிறந்த கால்பந்து வீரர் விருதை வழங்கி வருகிறது. இந்த ஆண்டில் விருது பெறத் தகுதியான வீரர்களின் பட்டியலை 80 பயிற்சியாளர்கள் மற்றும் 55 பத்திரிகையாளர்கள் கொண்ட குழு பரிந்துரைத்திருந்தது. இந்த பட்டியலில் ரொனால்டோ, மெஸ்ஸி, கியன்லூகி பபன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில் சிறந்த ஐரோப்பிய கால்பந்து வீரர் விருதை கிறிஸ்டியானோ ரொனால்டோ தட்டி சென்றார்.

ரியல் மாட்ரிட் அணிக்காக 2016&17ம் ஆண்டுகளில் நடந்த கால்பந்து போட்டிகளில் 12 கோல்களை அடித்ததற்காக அவர் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஏற்கெனவே 2014 மற்றும் 2016ம் ஆண்டுகளில் ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது நினைவு கூரத்தக்கது.