Home தமிழகம் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க  அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க  அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

7
0
SHARE

சென்னை, ஜன. 2&

தற்போது பண்டிகை காலம் என்பதால் இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், தமிழக மீனவர்களுக்கு சொந்தமான அனைத்து படகுகளையும் மீட்பதற்கான அவசர, அவசிய நடவடிக்கைகளை உடனடியாக மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று முன்தினம் தமிழகத்தில் ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 450 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்களை வீசி, அச்சுறுத்தி தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் மீனவர்களின் மீன்பிடிச் சாதனங்கள் சேதமடைந்தன. மேலும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 13 மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் சிறைப்பிடித்துச் சென்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

குறிப்பாக தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போது கடந்த பல மாதங்களாக வாரம் தோறும் இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலும், சிறைப்பிடித்தலும் நீடித்துக்கொண்டே போகிறது. இப்பிரச்சனையை மத்திய, மாநில அரசுகள் மிக முக்கியப் பிரச்சனையாக கவனத்தில் கொள்ளவில்லை. அது மட்டுமல்ல இலங்கை கடற்படையின் மனிதாபிமானமற்ற செயல் குறித்து மத்திய அரசு இலங்கை அரசுக்கு கடும் கண்டனமும் தெரிவிக்கவில்லை.

முக்கியமாக மத்திய அரசு இலங்கை அரசிடம் தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு ஏற்படுத்திக்கொடுக்க ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. மேலும் தமிழக மீனவர்கள் பிரச்சனையில் இதுவரை எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்காத மத்திய பா... அரசை தமிழக அரசு கண்டும் காணாமல் இருக்கிறது.

எனவேதமிழகஅரசுஉடனடியாகமத்தியஅரசிடம்தமிழகமீனவர்கள்பிரச்சனைக்குசுமூகத்தீர்வுஏற்படுத்திக்கொடுக்கமுக்கியப்பேச்சுவார்த்தையைநடத்தமுன்வரவேண்டும். மேலும் இனிமேல் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படக்கூடாது என்பதையும் மத்திய அரசு இலங்கை அரசிடம் குறிப்பிட்டு கூற வேண்டும்.

இந்த புத்தாண்டு முதல் தமிழக மீனவர்கள் வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, இலங்கை கடற்படையின் சிறைப்பிடித்தல் நடைபெறாமல், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் நிம்மதியாக, நல்வழியில், நம்பிக்கையோடு தொடர வேண்டும் என்பது தான் த.மா.கா. எதிர்பார்ப்பாகும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here