Home தலையங்கம் கடன்சுமையில்இருந்து தமிழகம் மீண்டு வருமா…?

கடன்சுமையில்இருந்து தமிழகம் மீண்டு வருமா…?

33
0
SHARE

குடும்பம் என்றால் செலவுகள் இருக்கும். அதற்காக குடும்ப தலைவர் அல்லது தலைவி வாங்கும் மாத சம்பளத்தை பட்ஜெட் போட்டு செலவிடுவார்கள். என்னதான் கைகளை இறுக்கி இறுக்கி செலவுகளை செய்தாலும் மாத கடைசியில் பற்றாக்குறைதான் நிலவும். இதற்காக ஏதாவது ஒரு வகையில் கடன் வாங்கித்தான் குடும்பத்தை கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

ஒருகுடும்பத்திற்கேஇப்படிஎன்றால்நமதுதமிழ்நாட்டிற்கேஎவ்வளவுதொகைசெலவிடவேண்டியதிருக்கும். எவ்வளவு கடன் வாங்கப்பட்டிருக்கும் என்றால் தலை சுற்றுகிறதல்லவாஇந்த தொகையை கேட்டால் இன்னும் தலை சுற்றும். ஆம்தமிழக அரசுக்கு 2015 & 16ம் நிதியாண்டில் மட்டும் 1,94,095 லட்சம் கோடியாக உள்ளது.

இந்த கடன் சுமையானது 1984&85ம் நிதிஆண்டில் ரூ. 2 ஆயிரத்து 129 கோடியாக இருந்தது. 2015&16ல், அரசின் கடன் சுமை ஒரு லட்சத்து, 94 ஆயிரத்து, 95 கோடியே, 65 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ஜி.எஸ்.டி. விதிப்பு காரணமாக தமிழக அரசுக்கு வருவாய் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டும் இதைவிட தமிழகத்தின் கடன் சுமை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன என்ற கருத்து மேலோங்கியுள்ளது. தமிழகத்தின் தற்போதைய நிலை மோசமாக உள்ளதால் இந்த கடன் சுமை அதிகரித்துள்ளதாகவும் கருத்துக்கள் பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி தமிழக அரசின் கடன் சுமை இரண்டு லட்சம் கோடி ரூபாயுடன் அரசு செலுத்த வேண்டிய வட்டி தொகையும் அதிகரித்தபடி உள்ளது. இதனால், அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலவச திட்டங்களால் தான், இவ்வளவு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆட்சியிலிருப்போர் கடன் சுமையை குறைக்க, உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

1984 & 85ம் ஆண்டு 2 ஆயிரத்து 129 கோடியாக இருந்த கடன் சுமை 2015 &16ம் ஆண்டில் 1,94,95 கோடியாக உயர்ந்துள்ளது. இது தமிழக மக்கள் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தமிழக அரசுக்கு கடன் சுமை என்றால் அது ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள சுமையாகவே பலர் கருதுகின்றனர். இதுபோன்ற கடன் சுமைகளுக்கு பெரிய பெரிய தொழில் அதிபர்களின் முறையான வரிகட்டாத தனமும் ஒரு காரணமாக கூறலாம்.

இந்த கடன் சுமையை குறைக்க அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே தமிழக போக்குவரத்து துறை  நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்படுகிறது. லாபத்தில் இயங்குவது டாஸ்மாக் ஒன்றுதான். இதில்தான் உடனடியாக பணத்தை எடுக்க முடியும். இதுபோன்று அரசு சார்பில் பல்வேறு பணம் கொழிக்கும் நிறுவனங்களை நிறுவ வேண்டும். பொதுத்துறை வங்கிகளில் அதிரடி சலுகைகள் வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களின் வருவாயை அதிகரிக்க என்ன வழி என்பதை கண்டறிய வேண்டும். இதுபோன்ற பல்வேறு வழிகளினால் மட்டுமே தமிழகத்தின் கடன் சுமையை படிப்படியாக குறைக்க முடியும்.

தமிழக அரசு இப்போதே சுதாரித்தால் மட்டுமே கடன் சுமையை குறைக்க முடியும். இல்லாவிட்டால் கடன் சுமை அதிகரித்தால் பின்னர் அதனை குறைக்க முடியாமல் பல்வேறு இழப்புகளை சந்திக்க வேண்டியது இருக்கும். எனவே வருகிற பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பு இந்த விவகாரத்தில் அரசு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். இதற்காக இப்போதே ஒரு குழுவை அமைத்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டால் பட்ஜெட் கூட்டத்திற்குள் இதற்கான ஒரு சொல்யூசன் கண்டிப்பாக கிடைக்கும் என்பதில் எந்தவித மாற்றமும் கிடையாது. தமிழகத்தை கடன் சுமையில் இருந்து மீட்பது அரசின் கையில் தான் இருக்கிறது.