Home மற்றவை உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மறுசீரமைப்பு ஆட்சேபனை தெரிவிப்பதற்கு காலக்கெடு நீட்டிக்க வேண்டும்தி.மு.க. மனு

உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மறுசீரமைப்பு ஆட்சேபனை தெரிவிப்பதற்கு காலக்கெடு நீட்டிக்க வேண்டும்தி.மு.க. மனு

22
0
SHARE

சென்னை, ஜன. 1&

உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மறுசீரமைப்பு குறித்த ஆட்சேபனையை தெரிவிக்க காலக்கெடு நீடிக்க வேண்டும் என தி.மு.. மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையருக்கு மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும் என தி.மு.. சார்பில் உயர்நீதிமன்றத்தின் முதல் பெஞ்சில் நிலுவையில் உள்ளது. நீதிமன்றத்தில் முதல் அமர்வு அளித்த தீர்ப்பின் படி 17.11.2017 தேர்தலை நடத்திட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் ஆளும் கட்சிக்கு ஆதரவாக  காலம் தாழ்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதியதாக வார்டு மறுசீரமைப்பு சட்டம் 2017ன்படி பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின புறக்கணித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் செயல்படுகின்றீர்கள்.

திருவள்ளுர், திருநெல்வேலி, மதுரை, திருவண்ணாமலை, வேலூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தி.மு.. உள்ளிட்ட அரசியல் கட்சியினரை அழைத்து வார்டு மறுசீரமைப்பு குறித்து கருத்துககளை கேட்டுள்ளதுடன், அதன் மீதான ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் முறையாக மறுசீரமைக்கப்பட்ட வார்டுகளின் பட்டியல் வைக்கப்படவில்லை.

மேலும்மாவட்டஆட்சியர்களுக்கு  மறுசீரமைப்பு பட்டியல் மீது ஆட்சேபனை கேட்க முடியாது. அவ்வாறு இருக்கும் போது 2 ந் தேதிக்குள் ஆட்சேபனையை எவ்வாறு தெரிவிக்க முடியும்.

மேலும் கடந்த 29ந் தேதி மறுசீரமைப்பு பட்டியல் வெளியிடப்பட்டத்தில் இருந்து 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே ஆட்சேபனைகளை அளிக்க முடியாது. வார்டு மறுசீரமைப்பு குறித்து பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கருத்து கூறுவதுதான் ஜனநாயகம். இந்த நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதுடன், அதற்கு போதுமான கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும்.

இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை ஆளும் கட்சியின் விருப்பப்படி நிறைவேற்ற முடியாது. புதிய வார்டு மறுசீரமைப்பில் தி.மு..வின் வாக்குகளை பிரிக்கும் வகையில் உள்ளது. எனவே வார்டு மறுசீரமைப்பு பட்டியல் மீது பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கருத்துகளை தெரிவிக்கும் வகையிலும், வெளிப்படைத் தன்மையுடன் ஆட்சேபனைகளை பெற வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here