Home விளையாட்டு தரங்காவுக்கு தடை: இலங்கை கேப்டனாக கபுகேதரா நியமனம்

தரங்காவுக்கு தடை: இலங்கை கேப்டனாக கபுகேதரா நியமனம்

21
0
SHARE

கொழும்பு, ஆக. 27&  இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

அந்த போட்டியில் இலங்கை அணி குறித்த நேரத்துக்குள் ஓவர்களை வீசவில்லை. இதையடுத்து கேப்டன்; உபுல் தரங்கா 2 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது.

அவருக்கு இதுபோன்று தடை விதிக்கப்படுவது 2வது முறையாகும். முன்னதாக சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது அவருக்கு இதே காரணத்துக்காக தடை விதிக்கப்பட்டது.

தரங்காவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இலங்கை அணியின் கேப்டனாக சமரா கபுகேதரா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இலங்கை அணியில் தினேஷ் சந்திமால், லஹிரு திருமன்னே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் தினேஷ் சந்திமால், அந்த அணியின் டெஸ்ட் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.