Home இந்தியா நேஷ்னல், ஓரியண்டல், யுனைடெட் இந்தியா உள்ளிட்ட காப்பீட்டு நிறுவனங்கள் பங்கு வெளியிட திட்டம்

நேஷ்னல், ஓரியண்டல், யுனைடெட் இந்தியா உள்ளிட்ட காப்பீட்டு நிறுவனங்கள் பங்கு வெளியிட திட்டம்

14
0
SHARE

புதுடெல்லி, ஜன. 1&

நேஷனல், ஓரியண்டல் மற்றும் யுனைªட்ட இந்தியா உள்ளிட்ட காப்பீட்டு நிறுவனங்கள் பங்கு வெளியிட தயாராகி வருகின்றன.

அடுத்த ஆண்டில் காப்பீட்டு துறையில் சில நிறுவனங்கள் இணைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சுரன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தபென் சிங்கால் தெரிவித்தார்.

சிறிய நிறுவனங்கள் இந்த தொழிலில் இருந்து வெளியேறுவதையும், ஏற்கனவே இருக்கும் பெரிய நிறுவனங்கள் அதிக சந்தையை கைப்பற்றுவதற்காக கையகப்படுத்தல் நடவடிக்கையும் எடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

காப்பீட்டு துறையில் ஐ.சி..சி.. லொம்பார்ட் நிறுவனம் முதன் முதலில் ஐ.பி.. வெளியிட்டு ரூ.5 ஆயிரத்து 700 கோடி திரட்டியது. ஜி..சி நிறுவனம் ஐ.பி.. மூலம் ரூ.11 ஆயிரத்து 176 கோடி திரட்டியது.

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் (ரூ9 ஆயிரத்து 467 கோடி), எச்.டி.எப்.சி. ஸ்டாண்டர்ட் (ரூ.8 ஆயிரத்து 695 கோடி) மற்றும் எஸ்.பி.. லைப் நிறுவனம் ரூ.8 ஆயிரத்து 386 கோடியும் திரட்டின.

இதனை தொடர்ந்து நேஷனல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஐ.பி.. வெளியிட தயாராகி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here