Home மற்றவை நிதின் படேல் விவகாரம் அமித் ஷா சமரச முயற்சி வெற்றிநிதி அமைச்சர் பொறுப்பை ஏற்றார்

நிதின் படேல் விவகாரம் அமித் ஷா சமரச முயற்சி வெற்றிநிதி அமைச்சர் பொறுப்பை ஏற்றார்

16
0
SHARE

ஆமதாபாத், ஜன. 1&

நிதின் படேலை போனில் தொடர்பு கொண்டு அமித் ஷா சமாதானப்படுத்தினார்.

குஜராத் மாநில துணை முதல்வரான நிதின் படேல் தனது பதவி அந்தஸ்துக்கு உரிய இலாகாக்கள் தனக்கு வழங்கப்படவில்லை என்று கோபங்கொண்டு தனக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.

தனது அதிருப்தியை பாரதீய ஜனதா கட்சியின் மேலிடத் தலைமைக்கும் நிதின் படேல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா இன்று காலை நிதின் பட்டேலுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

துணை முதல்வர் நிதின் பட்டேலின் அனுபவத்துக்கும் தகுதிக்கும் உரிய இலாகாக்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று முதல்வருக்கு அறிவுறுத்தியிருப்பதாக அமித் ஷா தெரிவித்தார். இதையடுத்து உடனே ஆளுநரைச் சந்தித்து தொகுதி மாற்றம் பற்றி முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்தார் என்றும் அமித் ஷா கூறினார்.அதன்படி நிதி இலாகா மீண்டும் நிதின் பட்டேலுக்கு ஒதுக்கப்பட்டது.

அதனை ஏற்று நேற்று தனக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்களின் பொறுப்புகளை ஏற்க இருப்பதாக நிதின் பட்டேல் டுவிட்டரில் செய்தி வெளியிட்டார். அதைத் தொடர்ந்து இலாகா பொறுப்புகள் மாறியதா என்ற விவரம் தெரியவில்லை.

வியாழனன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப்பின் இரண்டு நாள்களுக்கு வெளியே தலைகாட்டாமல் இருந்தார் நிதின்படேல். இதனை அறிந்த பட்டிடார் அனாமத் அந்தோலன் சமிதி தலைவர் ஹர்திக் படேல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். படேல் இனத்து அமைச்சர்களுக்கு எல்லாம் பாஜக அரசின் லாலிபாப்தான் கிடைக்கும். அதனால், நீங்கள் இங்கு வந்துவிடுங்கள் நான் இரண்டு செய்திகளை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

எங்களுடன் சேர்ந்து படேல் மக்களின் இடஒதுக்கீட்டுக்காக போராடலாம். இரண்டாவதாக, நீங்கள் படேல் வகுப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேருடன் வந்தால் உங்கள் அந்தஸ்துக்கு உரிய அமைச்சரவை பதவி வழங்க காங்கிரஸ் தலைமையுடன் பேசுகிறேன் என்று ஹர்திக் படேல் அழைப்பு விடுத்தார்.

ஞாயிற்றுக்கிழமை அமித் ஷா தொலைபேசியில் நிதின் பட்டேலுடன் பேச, அவர் நிதி இலாகாவை மீண்டும் பெற்றார்.அதைத் தொடர்ந்து  தனது இலாகா பொறுப்புகளை  நிதின்  ஏற்றார். இதனை டுவிட்டர், பேஸ் புக்கிலும் நிதின் பட்டேல் வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here