Home சிறப்புச் செய்திகள் இளைஞர்களுக்கான ஹாம் வானொலி & 36

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி & 36

53
0
SHARE

 முனைவர் தங்க.ஜெய்சக்திவேல் & வானொலி ஒலிபரப்பை கேட்பதே ஒரு கலை என்றோம். அதுவும் சிற்றலை ஒலிபரப்பினைக் கேட்பது அதனினும் பெரிது. அப்படியானால் ஹாம் வானொலியைக் கேட்பது எப்படியானதாக இருக்கும். ஹாம் வானொலியை வி.ஹெச்.எஃப்பில் கேட்பது ஒன்றும் சிரமமானது ஆகாது. அதுவே ஹெச்.எஃப்பில் கேட்பது என்பது ஒரு கலை. அதனை அனைவரும் பொறுமையாக கேட்டுவிட முடியாது. காரணம் டியூனிங்.டியூனிங் முக்கியம்

எந்த ஒரு வானொலியைக் கேட்பதானாலும், வானொலிப் பெட்டியை டியூன் செய்தாக வேண்டியது ஒரு காலத்தில் இருந்தது. இன்று டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்தபின் எண்களை அழுத்தும் பட்சத்தில் அந்த அலைவரிசைக்கே நம்மைக் கொண்டு செல்கிறது இன்றைய வானொலிப் பெட்டிகள். இன்னும் ஒரு படி மேலே செல்கிறது எஸ்.டி.ஆர். வானொலிப் பெட்டிகள். திரையில் வானொலி ஒலிபரப்பின் சாரமே தெரிவதால், நமக்குத் தேவையான ஒலிபரப்பினை, மௌசின் துணை கொண்டு நாமே கிளிக் செய்து கேட்டுக் கொள்ளும் வசதி வந்துவிட்ட பின், நாம் டியூனிங் பற்றி பேசிப் பயன் இல்லை.

ஆனாலும், வானொலியில் டியூனிங் செய்வது என்பது ஒரு கலையே. இதனோடு ஆண்டனாவை டியூனிங் செய்வதைக் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். பழைய வானொலிப் பெட்டிகளில் டியூனிங் செய்வதற்கு ஒரு பெரிய திருகான் வைத்திருப்பார்கள். சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் திரைப்படத்தில் கூட ஒரு பெரிய வால்வ் வானொலிப் பெட்டி டியூனருடன் ஒரு காட்சியில் இடம் பெற்றது.

பெரிய டியூனிங் வசதி வானொலிப் பெட்டியில் இருப்பதே ஒரு அழகு தான். பெரிய டியூனிங் இருந்தால் எளிதாக ஒலிபரப்புகளைப் பிடிக்க முடியும். அதுவும் ஹாம் வானொலிப் பெட்டிகளில் இருந்தால், இன்னும் சிறப்பு. டியுனிங்கின் வேலையேவேரியபிள் ப்ரீக்வன்சி ஆஸிலேட்டரைஇயக்குவது ஆகும். இதன் துணை கொண்டே அலைவரிசைகளை மாற்றுகின்றோம். மென்பொருள் துணை கொண்டு இயங்கும் வானொலிப் பெட்டிகளில் இந்த பகுதி இருக்காது.

டியூனிங்கிற்கும், காதுகளுக்கும் நேரடியான தொடர்பு உண்டு. குறிப்பாக மோர்ஸ் குறியீடுகளின் ஒலிபரப்பு. எஸ்.எஸ்.பி. ஒலிபரப்பு மற்றும் வி.ஹெச்.எஃப். ஒலிபரப்புகளை காதுகளைத் தீட்டிக்கொண்டு கேட்க வேண்டும். ஆனால், ரேடியோ டெலி டைப், பாக்கெட் மற்றும் பி.எஸ்.கே31 போன்றவற்றை  கம்ப்யூட்டரில் தோன்றும் எழுத்துகளை வைத்து அடையாளம் காண முடியும். இவற்றை சரியாக கேட்பதற்குடியூனிங் இண்டிகேட்டர்கள்உதவுகின்றன.

சிங்கிள் சைட் பேண்ட்

எஸ்.எஸ்.பி. என சுருக்கமாக இதனை அழைப்பர். பொதுவான வானொலி ஒலிபரப்பாளர்களே, ஹாம் வானொலி ஒலிபரப்பாளர்களை பாராட்டுவது இதில் தான். காரணம், குறைந்த சக்தியில் அதிக தொலைவிற்கு பயணிக்கும் ஒரு தொழில்நுட்பத்தினை ஹாம்கள் பயன்படுத்துகின்றனர். இது பல்வேறு வகைகளில் வானொலி ஒலிபரப்பிற்கு பயன் அளிக்கிறது. இது மட்டுமல்லாது ரேடியோ ஸ்பெக்ட்ரத்தில் குறைந்த அளவு இடத்தினை மட்டுமே இது ஒலிபரப்பிற்கு எடுத்துக்கொள்கிறது.

பெரும்பாலான ஹாம் ஒலிபரப்புகள் ஹெச்.எஃப்பில் மட்டுமே செய்யப்படுகின்றன. அதுவும் எஸ்.எஸ்.பியில் மட்டுமே ஒலிபரப்பப்படுகின்றன. குறிப்பாக அப்பர் சைடு பேண்ட்  அல்லது லோயர் சைடு பேண்ட்

பொதுவாக ஹாம்கள் அனைவரும், ஒரே கட்டுக்கோப்புடன் செயல்படுபவர்களாக இருப்பர். அவர்கள் நினைத்த மாத்திரத்தில் அனைத்து அலைவரிசைகளிலும் ஒலிபரப்பி விட மாட்டார்கள். குறிப்பாக எஸ்.எஸ்.பியில் ஒலிபரப்பும் பொழுது, 3 கி.ஹெ. அதிகமாக இருந்தால் அப்பர் சைடு பேண்டிலும், 3 கி.ஹெ. குறைவாக இருந்தால் லோயர் சைடு பேண்டிலும் ஒலிபரப்புவர்.

இன்னும் சற்றே தெளிவாக விளக்க வேண்டுமாயின், 14350 கி.ஹெ. (20 மீட்டரில்) ஒலிபரப்ப வேண்டுமாயின் 14347 கி.ஹெ. ஒலிபரப்புவர். இதனால் அந்த அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட அலைவரிசையில் அந்த ஒலிபரப்பானது செல்லும். சிற்றலை வானொலி பெட்டி வைத்திருப்பவர்கள், இந்த ஒலிபரப்புகளை, மூக்கில் பேசுவது போன்று சாதாரண வானொலிப் பெட்டிகளிலேயே கேட்க முடியும்.

லமாகான் வானொலி மாநாடு

சமீப காலமாக இந்தியாவில் வானொலி மாநாடுகளுக்கு பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது. டிசம்பர் மாதம் தான் கொல்கத்தா ஹாம் திருவிழா நடைபெற்றது. இப்பொழுது ஹைத்ராபாத்தில் வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில்லமாகான் வானொலி மாநாடுநடைபெற உள்ளது. பிப்ரவரி மாதம் மாமல்லபுரத்தில்மஹாமீட்நடக்கவுள்ளது. ஹாம் வானொலித் துறையில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டிய முக்கிய மாநாடு இதுவேயாகும். அதற்கு காரணம், முதல் முறையாக தொழில்நுட்பம் சார்ந்து இந்த இரண்டு நாள்லமாகான் வானொலி மாநாடுநடைபெற உள்ளது. இதில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் அரங்கேற்றம் செய்யப்பட உள்ளது.

முதல் நாள் மாநாட்டில் அமெச்சூர் செயற்கைக் கோள்கள் பற்றியும், ‘க்யூப் சேட்எனும் புதிய ஹாம் சேட் 2ன் செயல்பாடுகள் குறித்தும் பர்ஃஹான் அவர்கள் விரிவான உரை வழங்க உள்ளார். ஹாம் வானொலித் தொழில்நுட்பத்தினை இன்றைய இளைஞர்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தினை ஏற்படுத்தியவர் தேவ். இந்த முறை, ‘ராஸ்பர்ரி பைகொண்டு எப்படி சாதாரண பீக்கான் அல்லது எஸ்.டி.ஆர். வானொலிப் பெட்டி செய்யலாம் என்பதை விளக்கவுள்ளார். ‘லீனியர் ஆம்பிளிபயர்பற்றி இந்த துறையில் பல்லாண்டுகள் அனுபவம் கொண்ட கிருஷ்ணகுமார் அவர்கள் வழங்க உள்ளார்கள். தான் கண்ட தொழில்நுட்ப ரகசியங்களையும் பகிர்ந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.

என்னதான் நல்ல வானொலிப் பெட்டிகள் இருந்தாலும், நல்ல ஆண்டனா இல்லையென்றால், ஒலிபரப்பு தெளிவாக இருக்காது. நல்ல ஆண்டனாவை அனைவரும் எப்படி செய்யலாம்? ஒரு பைசா செலவில்லாமல் ஒரு ஆண்டனாவை எப்படி அமைப்பது என்று ஆண்டனா குரு அரவிந்த் (க்ஷிஹி2கிஙிஷி) பயிற்சி அளிக்கவுள்ளார். உங்களிடம் உள்ள கம்ப்யூட்டரைத் துணைகொண்டே எப்படி ஆண்டனாவை டெஸ்ட் செய்யலாம் என்பதை செயல் விளக்கத்துடன் கூற உள்ளார்.

இந்தியாவின் செயற்கைக் கோள் புலியுடன்ஆம்சாட் ஏஓ 91டன் எப்படி நம்மிடம் உள்ள சாதாரண கையடக்க ஹாம் வானொலிப் பெட்டிகளைக் கொண்டு தொடர்பு கொள்ள முடியும் என்பதை விரிவாக விளக்கவுள்ளார். இதற்கு தேவையான சிறந்த சேட்டிலைட் ஆண்டனா எது? என்பதனையும் கூற உள்ளார் நிதின் (க்ஷிஹி3ஜிசீநி). ஒரு குட்டி டிரான்சீவர் செய்ய உங்களுக்கு ஆர்வம் என்றால், தவறாது கலந்து கொள்ள வேண்டிய நிகழ்வு ராகுல் (க்ஷிஹி3கீயிவி) நடத்துவது ஆகும். ழிஷீக்ஷீநீணீறீ னிஸிறி சிகீ டிரான்சீவரை எப்படி குறைந்த செலவில் இந்தியாவில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு தயாரிக்கலாம் என்பதை விரிவாக விளக்கவுள்ளார்.

நரி வேட்டை

நம் அனைவருக்கும் நரி வேட்டைக்கு செல்வதற்கு பிடிக்கும். எப்படி எளிதாக வேட்டையில் ஜெயிக்கலாம்? அதற்கு எந்த விதமான ஆண்டனா தேவை? நரியைப் பிடிக்க தந்திரம் என்ன? போன்ற அனைத்து விபரங்களையும் பகிர்ந்து கொள்கிறார் பிராதாப் (க்ஷிஹி2றிளிறி). ‘நரிஎன்றால் இங்கு உண்மையான நரி என்று நினைத்துவிடாதீர்கள்.

எங்கே இருந்து ஒலிபரப்பாகிறது ஒரு குறிப்பிட்ட வானொலி? என்று கண்டுபிடிப்பதுவே நரி வேட்டை. அது போன்றே, உங்களுக்கான எஸ்.டி.ஆர். வானொலிப் பெட்டியை நீங்களே எளிதாக செய்து கொள்வது எப்படி? என்ற விபரத்தினையும் உங்கள் வானொலி மன்றத்தின் வெப் எஸ்.டி.ஆரை. எப்படி அமைக்களாம் என்பதனை எளிதாக விளக்க உள்ளார் சுரேஷ் (க்ஷிஹி2ஙீஷிரி). இவர், இந்தியாவின் புகழ் பெற்ற ஷ்ஷ்ஷ்.ஷ்மீதீsபீக்ஷீ.வீஸீ எனும் இணைய தளத்திற்கு சொந்தக்காரர்.  நீங்களே செய்த உங்களின் வானொலிப் பெட்டிக்கான டிஜிட்டல் கன்ட்ரோலை எப்படி அமைக்கலாம் என்பதை விளக்க உள்ளார்  பட்னாகர் (க்ஷிஹி2ஷிறிதி). சமீப காலமாக நம் வானொலிப் பெட்டிகளில் டி.டி.எஸ். மற்றும் பி.எல்.எல். ஆகியவற்றை இணைப்பது எளிதாகிவிட்டது.

சில நூறு ரூபாயில் எப்படி நம்மிடம் உள்ள சாதாரண வானொலியை டிஜிட்டல் வானொலியாக்கலாம் என்ற ரகசியத்தினை நம்மோடு பகிர்ந்து கொள்ள உள்ளார்.

அதே கூட்டத்தில் அமெரிக்காவின் ஹாம் உரிமத்தினைப் பெற நீங்கள் விரும்பினால், அதற்கான தேர்வும் அன்றே நடைபெறுகிறது. தேர்வினை சுரேஷ் குமார் (க்ஷிஹி2மிறிலி) நடத்துகிறார்.

இரண்டாம் நாள் நிகழ்வின் தொடக்கமாகபறக்கும் விமானத்தினை எப்படி வானொலியைக் கொண்டு கன்ட்ரோல் செய்யலாம்?’ என்பது பற்றி விளக்கவுள்ளார். குறிப்பாக  ஏரோபிளேனை எப்படி வானொலி அலைவரிசை கொண்டு கன்ட்ரோல் செய்யலாம் என்பதை செயல் விளக்கமாக செய்து காட்டவுள்ளார் கவியரசு (க்ஷிஹி2ஹிகிக்ஷி). அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணியாற்றும் இவரின் ஹாம் வானொலிக்கான பங்களிப்பு மிக முக்கியமானது. சிமுலேசன் டூல்ஸ் கொண்டு ஆண்டனாவை  அமைப்பது எப்படி? என்று விளக்கவுள்ளார் ரங்கா ராவ் (க்ஷிஹி3ஹிணிபி).

நம் அனைவருக்கும் ஒரு எஸ்.டி.ஆர். வானொலிப் பெட்டி வாங்க ஆசை. ஆனால் அதற்கு லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் தேவை. இவை இரண்டும் இல்லாமல் எஸ்.டி.ஆர். வானொலிப் பெட்டியை தயாரிக்க சொல்லிக் கொடுக்கிறார் டாக்டர்.நாயுடு (க்ஷிஹி2ஞீகிஞீ).

ஒருசிறியபெட்டியில்அனைத்துமென்பொருட்களையும்அடக்கிகண்டுபிடிக்கப்பட்டுள்ளஇந்தவானொலிப்பெட்டியின்பெயர்க்ஷிஹிஷிஞிஸி. இது மட்டுமல்லாது, uஙிமிஜிஙீ எனும் அனைத்து அலைவரிசைகளிலும் இயங்கக் கூடிய ஹெச்.எப். வானொலிப் பெட்டியை எப்படி நாமே செய்யலாம் என்பதையும் விளக்கவுள்ளார் பர்ஃஹான்.

ரூ.7000த்திற்கு நாமே செய்த நமக்கான வானொலிப் பெட்டியோடு அன்றைய இரவைக் கழிக்கலாம். இந்த இரண்டு நாள் நிகழ்வில் கலந்துகொள்ள நுழைவுக் கட்டணம் ரூ.150 மட்டுமே. தங்குவதற்கு ஒரு இரவுக்கு ரூ.300. மேலதிக விபரங்களுக்கு லிணீனீணீளீணீணீஸீ கினீணீtமீuக்ஷீ ஸிணீபீவீஷீ சிறீuதீ, ளிஜீஜீ: நிக்ஷிரி ளிஸீமீ, ஸிஷீணீபீ ழிஷீ 1, ஙிணீஸீழீணீக்ஷீணீ பிவீறீறீs, பிஹ்பீக்ஷீணீதீணீபீ 500 063, விஷீதீவீறீமீ: 08106416614, ணி.விணீவீறீ: வீஸீயீஷீ@றீணீக்ஷீநீ.வீஸீ, கீமீதீ: ஷ்ஷ்ஷ்.றீணீக்ஷீநீ.வீஸீ.