Home தலையங்கம் மீண்டும் பிறப்போம் புதிதாக…!

மீண்டும் பிறப்போம் புதிதாக…!

18
0
SHARE

இ ன்று நாம் 2017&ம் ஆண்டு என்கிற இடத்தில் இருந்து 2018&ம் ஆண்டு என்கிற இடத்தை நோக்கி பயணம் செய்யத் தொடங்கியிருக்கிறோம். கடந்த 2017&ம் ஆண்டில் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்திதுவிட்டனர். மருத்துவ படிப்பு என்கிற முக்கிய படிப்பை படிக்க முடியுமா என்று மாணவர்களை கலங்க வைத்த நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழைந்து கால் பதித்துள்ளது. இதற்காக அரியலூர் மாவட்ட கூலித் தொழிலாளியின் மகள் அனிதா தற்கொலை செய்துகொண்டார். இதனால் போராட்டங்கள் வெடித்தது.

அடுத்ததாக நாடு முழுவதும் ஒரே வரி என்ற சரக்கு மற்றும் சேவை வரி (.எஸ்.டி.) விதிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் சிறு வியாபாரிகள் குழப்பத்தில் மூழ்கிறது. பிறகு சில பொருட்களுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை குறைத்து வியாபாரிகளை குளிர்வித்தது.

டிவிட்டர் மூலம் ஆளும் கட்சியை விமர்சனம் செய்து வந்த நடிகர் கமல் தான் கட்சி அறிவிப்பேன் என்று பகிரங்க அறிவிப்பை வெளியிட்டார். தமிழக அரசியலிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. முதல்வராக இருந்த ஒ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்பட 3 பேர் 4 ஆண்டு சிறைதண்டனை பெற்றனர். சசிகலாவின் உறவினர் டி.டி.வி. தினகரன் அ.தி.மு.. துணை பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

எடப்பாடிபழனிசாமிமுதல்வராகபதவிஏற்றார். .பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். அவருக்கு ஆதரவு பெருகியது. இதையடுத்து அ.தி.மு.. சின்னத்தை கைப்பற்றும் முயற்சிக்காக லஞ்சம் கொடுத்ததாக டி.டி.வி. தினரகன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நிபந்தனைகளுடன் எடப்பாடி பழனிசாமி அணியினரும், .பன்னீர்செல்வம் அணியினரும் இணைந்தனர். .பி.எஸ்.க்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது. காலியாக இருந்த ஆர்.கே.நகருக்கு ஏப்ரல் மாதம் நடக்க இருந்த இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகாரால் தடைசெய்யப்பட்டது.தமிழகத்தின் புதிய ஆளுனராக பன்வாரிலால் புரோகித் பொறுப்பேற்றார். அவர் தன்னிச்சையாக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அவர்மீது சில குற்றச்சாட்டுகள் பாய்ந்தன.

இதையடுத்து ஆர்.கே.நகருக்கு மீண்டும் தேர்தல் நடந்தது. இதில் டி.டி.வி. தினகரன் அமோக வெற்றி பெற்றார். அவர் எம்.எல்..வாக பதவியும் ஏற்றுக்கொண்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து ஆண்டு இறுதியான நேற்று அறிவிப்பதாக தனது ரசிகர்களை சந்தித்த நிகழ்ச்சியின் போது தெரிவித்திருந்தார். அதன்படி நேற்றுஅரசியலுக்கு வருவது உறுதிஎன்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டார். அவருக்கு அனைத்து அரசியல் கட்சியினரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதுபோன்ற பல்வேறு பரபரப்பான நிகழ்வுகளுடன் 2017ம் ஆண்டு நேற்றுடன் முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது 2018ம் ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்கிறோம். இந்த புதிய ஆண்டில் பழைய கசப்பான நிகழ்வுகளை மறப்போம். நல்ல நிகழ்வுகளை மேலும் சிறப்பாக செய்வோம் என்று உறுதி ஏற்போம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் மேலும் பல சாதனைகளை நாம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனை திறம்பட செய்து நமது நாட்டை வல்லரசு என்ற நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

எந்த மதமாக இருந்தாலும் ஒற்றுமையுடன் இருந்து நாட்டை முன்னேற்றப்பாதைக்கு அழைத்து செல்லும் யுத்தியை கையாள வேண்டும். நீட் தேர்வு போன்ற பல்வேறு அறிவிப்புகளும் வரலாம். அவற்றையும் எதிர்கொள்ள மாணவர்கள் தயாராக வேண்டும். இதுபோல் புதிது புதிதாக, அறிவுப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் சிந்தித்து செயல்பட்டால் இந்த இனிய புத்தாண்டு முழுவதையும் மகிழ்ச்சியாகவும், சாதனைகள் நிறைந்ததாகவும் மாற்றி சாதனை படைக்கலாம்வாருங்கள் உங்களுடன் சாதனைக்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்.