Home சுடச்சுட சுதந்திர போராட்ட தியாகிக்கு 45 நாட்களில் பென்ஷன் வழங்குங்கள் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு...

சுதந்திர போராட்ட தியாகிக்கு 45 நாட்களில் பென்ஷன் வழங்குங்கள் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

15
0
SHARE

சென்னை, ஆக. 27& சுதந்திரப் போராட்ட தியாகிக்கு 45 நாட்களில் பென்ஷன் வழங்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.முத்தையா, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு வருமாறு:

இந்திய சுதந்திர போராட்டங்களின் முக்கிய போராட்டங்களில் ஒன்றான வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டு 1942 அக்டோபர் 7ம் தேதி முதல் அக்டோபர் 21ம் தேதி வரை சிறை வாசம் அனுபவித்தேன்.

நான் சிறை சென்றபோது எனது வயது 19 எனக்கு தியாகி பென்சன் வழங்க கோரி நாகை மாவட்ட கலெக்டருக்கும், பென்ஷன் துறை ஆணையருக்கும் மனு அனுப்பினேன். எனது மனு  நிராகரிக்கப்பட்டது. எனவே எனக்கு சுதந்திர போராட்டதியாகி பென்ஷன் வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:

மனுதாரர் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்துள்ளார்.

ஆனால் கடந்த  1981 மே 5ம் தேதி தமிழக அரசின் உத்தரவில் சுதந்திர போரட்டத்தில் கலந்துகொள்ளும் போது மனுதாரருக்கு 18 வயது தான் என்றும், 21 நாட்கள்  சிறையில் இருந்தால்தான் தியாகி பென்சன் கோர முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது என்றும்  அதன் அடிப்படையில் மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் இதே போன்ற ஒரு வழக்கில் வழங்கிய தீர்ப்பில், சுதந்திர போராட்டத்தில் கலந்துகொள்ளும்போது அவர்களின் வயதை கருத்தில் கொள்ளும்போது அவர்களின் வயதை கருத்தில் கொள்ளாமல்  நாட்டுக்காக போராடியதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, மனுதாரருக்கு 45 நாட்களில் பென்சன் வழங்க அரசுக்கு உத்தரவிடுகிறேன். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.