Home சம்பவம் மலேசியாவுக்கு கடத்த முயற்சி 40 டன் செம்மரம் பறிமுதல்

மலேசியாவுக்கு கடத்த முயற்சி 40 டன் செம்மரம் பறிமுதல்

31
0
SHARE

சென்னை, ஆக. 27&  சென்னை துறைமுகத்தில் இருந்து மலேசியாவுக்கு கப்பல் வழியாக கடத்த இருந்த  ரூ. 16 கோடி மதிப்பிலான, 40 டன் எடைக்கொண்ட செம்மரம் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை துறைமுகத்தில் இருந்து மலேசியாவுக்கு கப்பல் மூலமாக கண்டெய்னரில், செம்மரம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வந்தது.

இதை தொடர்ந்து, சுங்கத்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். துறைமுகத்தில் இருந்து மலேசியாவுக்கு கப்பலில் ஏற்ற இருந்த  சந்தேகம்படும்படியான கண்டெய்னரின் சீல் உடைத்து சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அந்த கண்டெய்னரில், ரூ.16 கோடி மதிப்பிலான , 40 டன் செம்மரம் கட்டைகள் கிடந்தன. அவற்றை பறிமுதல் செய்து, சுங்க துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.