Home தமிழகம் இந்தியாமுழுவதும் காவல்துறை நவீனமாக்குதலுக்கு தமிழகம் தான் முன்னோடி முதல்வர் பழனிசாமி பெருமிதம்இந்தியாமுழுவதும் ...

இந்தியாமுழுவதும் காவல்துறை நவீனமாக்குதலுக்கு தமிழகம் தான் முன்னோடி முதல்வர் பழனிசாமி பெருமிதம்இந்தியாமுழுவதும் காவல்துறை நவீனமாக்குதலுக்கு தமிழகம் தான் முன்னோடி முதல்வர் பழனிசாமி பெருமிதம்

45
0
SHARE

சென்னை, ஆக. 27&  இந்தியா முழுவதும் காவல்துறை நவீனமாக்குதலுக்கு தமிழகம் முன்னோடியாக இருந்துள்ளது என்று முதல்வர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தென் மண்டல துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் பரிசுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:

வில்லுக்கு விஜயன், சொல்லுக்கு அகத்தியன்என்பார்கள். வில் வித்தையில் மிகச் சிறந்த வீரனாக விளங்கிய அர்ச்சுனனின் பெயர் மகாபாரதத்தில் சிறந்த இடத்தைப் பிடித்திருக்கிறது. குறி தவறாமல் அம்பு எய்துவதற்கு இன்றைக்கும் மக்கள் அர்ச்சுனனையே உதாரணமாக கூறுகிறார்கள் என்றால், வில்வித்தை என்பது மனித வரலாற்றில் எத்தனை முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பதை நாம் உணர முடியும். அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்த பின்னர் துப்பாக்கி சுடுதலும் அதே அளவிற்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

குறிபார்த்து துப்பாக்கி சுடும் நுணுக்கத்தைப் பெற்றிருக்கின்ற உங்களையெல்லாம், நான் அர்ச்சுனனாகப் பார்க்கிறேன். இதிகாசத்தில் நீங்கா இடம் பெற்ற அர்ச்சுனனைப் போல இந்திய வரலாற்றில் நீங்களும் சிறந்த இடத்தைப் பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

இப்படிப்பட்ட துப்பாக்கி சுடும் கலையை மேலும் நவீனப் படுத்துவதற்காக மறைந்த முதல்வர் தமிழ்நாடு காவல்துறைக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். காவல் துறையை நவீன மயமாக்கும் திட்டத்தை தேசியத் திட்டமாக ஏற்படுத்துவதற்கு மறைந்த முதல்வர் முன்னோடியாக திகழ்ந்திருக்கிறார்.

மறைந்த முதல்வர் 1991ம் ஆண்டில் முதலமைச்சராகப் பதவியேற்றபோது, தமிழ்நாடு காவல் துறையிடம் பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும் எதிர்த்துப் போராட போதிய ஆயுதங்கள் இல்லாததை உணர்ந்து, அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து, தமிழ்நாடு காவல் துறையை நவீனப்படுத்த 30 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டுமென்று வலியுறுத்தினார்கள். அதனால் மத்திய அரசின் கணிசமான நிதி உதவியுடன் ஏகே 47 ரகம் மற்றும் எம்பி .5 போன்ற நவீன ஆயுதங்கள், நவீன வாகனங்கள், டிஜிட்டல் மைக்ரோவேவ் தொலைதொடர்பு இணைப்புமுறை உள்ளிட்டவைகளை வாங்கி தமிழ்நாடு காவல் துறையை நவீனப்படுத்தினார்.

தமிழ்நாடு காவல்துறை நவீனப் படுத்தப்பட்டதை அறிந்து, மற்ற மாநிலங்களும் தங்கள் மாநில காவல் துறையை நவீனப்படுத்தத் தொடங்கின. எனவே, மற்ற மாநிலங்களுக்கெல்லாம் தமிழ்நாடு அரசுதான் வழிகாட்டியாக இருந்திருக்கிறது என்று நாம் பெருமை அடையலாம். தளவாட பொருட்கள் மற்றும் மைதானத்தை சீர் செய்யும் பணிகள் என பொதுவான பணிகள் பல செய்யப்பட்டாலும், தனி மனிதனாக தன்னுடைய திறனை வெளிப்படுத்தி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வீரர்களுக்கும் போதிய ஊக்குவிப்பினை அளிப்பதில் மறைந்த முதல்வர் எப்போதுமே முதலிடத்தில் இருந்துள்ளார்.

அந்த வகையில், அவர்களின் பெயரிலேயே ஜெ.ஜெ.சுழற்கோப்பை என்று தனியாக ஒன்று உருவாக்கப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அன்பு, ஒழுக்கம், நம்பிக்கை, தலைமைப் பண்பு, சமாதானம், ஒத்துழைப்பு, அனைவரையும் மதித்தல், உடல் நலம் பேணுதல் உள்ளிட்ட உயர்ந்த பண்புகளை இப்படிப்பட்ட திறன் வளர்க்கும் போட்டிகள் மூலம் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

தேசிய அளவிலான வளர்ச்சியைப் பெறுவதற்கான போட்டிகளாக இவை அமைந்திருக்கின்றன. வெற்றி தோல்வி என்பதை சரி நிலையில் வைத்து பார்ப்பதுதான் ஒரு வீரனின் குணமாக இருக்க வேண்டும்.

தோல்வி என்பது முடிவு அல்ல, வெற்றிக்கான தொடக்கம் என்பதை உணர்ந்து வெற்றியின் அடுத்த நிலையை அடைவதற்கான அதிகப்படியான முயற்சியை தொடங்கி வைக்கவே வெற்றி தோல்வி முடிவுகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு பேசினார்.