Home விளையாட்டு இந்திய வீரர்கள் தென் ஆப்பிரிக்கா பயணம்முதல் டெஸ்ட் 5&ந் தேதி தொடங்குகிறது

இந்திய வீரர்கள் தென் ஆப்பிரிக்கா பயணம்முதல் டெஸ்ட் 5&ந் தேதி தொடங்குகிறது

12
0
SHARE

மும்பை, டிச. 28&

தென் ஆப்பிரிக்கா அணியுடன் டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் தொடரில் விளையாட விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தென்ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றது.

இந்தியகிரிக்கெட்அணிசமீபத்தில்இலங்கைஅணிக்குஎதிரான 3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) விளையாடி வெற்றி பெற்றது. மூன்று தொடர்களையும் கைப்பற்றி முத்திரை பதித்தது.

இதைதொடர்ந்து இந்திய அணி, தென் ஆப்பிரிக்க மண்ணில் விளையாட உள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய வீரர்கள் நேற்று நள்ளிரவு புறப்பட்டு சென்றனர்.

மும்பையில் இருந்து துபாய் சென்று அங்கிருந்து தென் ஆப்பிரிக்கா செல்ல உள்ளனர். கேப்டன் கோலி இலங்கைக்கு எதிரான டெஸ்டில் மட்டும் ஆடினார். ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரில் ஆடவில்லை. நடிகை அனுஷ்காவை திருமணம் செய்ததால் இந்த தொடரில் ஓய்வு கேட்டு இருந்தார். தற்போது அவர் அணியோடு இணைந்து கொள்கிறார்.

விராட் கோலி தனது மனைவி அனுஷ்காவுடன் தென் ஆப்பிரிக்கா செல்கிறார். இருவரும் அங்கு புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். புத்தாண்டை கொண்டாடியவுடன் அனுஷ்கா நாடு திரும்பி விடுவார்.

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 5ந்தேதி கேப்டவுனில் தொடங்குகிறது. ஜனவரி 28&ந் தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிகிறது.

பிப்ரவரி 1ந்தேதி முதல் 16ந்தேதி வரை ஒருநாள் போட்டிகள் நடக்கிறது. இதில் ஒரு போட்டியை தவிர மற்ற 5 ஆட்டங்களும் பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. அதை தொடர்ந்து பிப்ரவரி 18&ந் தேதி முதல் 24&ந் தேதி வரை 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

இந்திய அணி கடைசியாக 2014&15ம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது டெஸ்ட் தொடரை இழந்தது. அதன்பிறகு விளையாடிய 10 டெஸ்ட் தொடரில் தொடரை இழந்தது இல்லை.

9 டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. ஒரு தொடர் சமனில் முடிந்தது. இதில் பெரும்பாலும் சொந்த மண்ணில் தான் விளையாடியது. கடைசியாக 2013ம் ஆண்டு அங்கு 2 டெஸ்டில் விளையாடி 0&1 என்ற கணக்கில் தோற்றது.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வீரர்கள் விவரம்:&

விராட் கோலி (கேப்டன்), ரகானே (துணைகேப்டன்), தவான், முரளிவிஜய், புஜாரா, ரோகித்சர்மா, ஹர்த்திக் பாண்ட்யா, விர்த்திமான்சகா, அஸ்வின், ஜடேஜா, உமேஷ்யாதவ், இஷாந்த்சர்மா, முகமது?ஷமி, புவனேஷ்வர்குமார், லோகேஷ் ராகுல், பும்ரா, பார்த்தீவ் பட்டேல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here