Home மற்றவை கவர்னர் அழைக்காவிட்டால் ஜனாதிபதியை சந்திப்போம் தங்கத்தமிழ்ச்செல்வன் பேட்டி

கவர்னர் அழைக்காவிட்டால் ஜனாதிபதியை சந்திப்போம் தங்கத்தமிழ்ச்செல்வன் பேட்டி

13
0
SHARE

சென்னை, ஆக. 27&  கவர்னர் எங்களை அழைக்காவிட்டால், ஜனாதிபதியை சந்திப்போம் என டி.டி.வி. தினரகன் ஆதரவு எம்.எல்.. தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார்.

டி.டி.வி. ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் புதுச்சேரியில் உள்ள புதுவை சன்வே ஓட்டலில் தங்கியுள்ளனர். இந்தநிலையில், டி.டி.வி. தினகரின் தீவிர ஆதரவாளரான  எம்.எல்.. தங்க தமிழ்செல்வன் நிருபர்களை சந்தித்தார். அப்போது, அவர், கூறியதாவது:

.தி.மு.. என்ற மாபெரும் இயக்கம் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டது. அது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட மிகப்பெரிய கட்சியாகும். எங்கள் கட்சியில் பிளவு மற்றும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் எல்லாம் ஒருங்கிணைந்து இங்கு வந்து தங்கியுள்ளோம்.

தொகுதி மக்களை, ஏன்? மனைவி மக்களை, சொந்த பந்தங்களை விட்டு விட்டு, சோதனை காலத்தில் இங்கு வந்து கூடியிருக்கிறோம். ஆனால், தவறுதலாக, நாங்கள் உல்லாசமாக இங்கு தங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமியை  சசிகலாதான் நியமித்தார். ஆனால், அவர் சசிகலாவுக்கு  எதிராக திரும்பி விட்டார். அதோடு துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனையும் பதவியை விட்டு நீக்க வேண்டும் என்கிறார். இந்த கட்சியை வழிநடத்த, வலிமைப்படுத்த சசிகலா மற்றும்  தினகரனால் மட்டும்தான் முடியும்.

கவர்னர் உங்களை அழைப்பார் என நம்புகிறோம். கவர்னரிடம் மனு கொடுத்து,  இன்னும் 2 நாட்களில், கட்டாயமாக அழைப்பார் என

நம்புகிறோம். அப்படி கவர்னர் எங்களை அழைக்காவிட்டால்,  கவர்னரை நியமித்த ஜனாதிபதியை சந்திக்க திட்டமிட்டுள்ளோம். அவரிடம் எங்கள் கோரிக்கையை முன் வைப்போம். எங்களின்  ஒற்றுமையை வெளிப்படுத்த சென்னையிலேயே இருந்திருக்கலாம் என கேட்கிறார்கள். ஆனால்,  ஒரு அமைச்சர்,  பணம் பாதாளம் வரைக்கும் பாயும் எனபேட்டி கொடுக்கிறார். இதனால் தமிழக அரசு மீது நம்பிக்கை இல்லை. எனவே புதுவையில் வந்து தங்கியுள்ளோம்.

முதல்வரை  மாற்ற வேண்டும் என்பது தான் எங்களின் ஒரே கோரிக்கை. இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தவர்களுக்கு துணை முதல்வர் , அமைச்சர் பதவி என வழங்குகின்றனர். சபாநாயகர் தனபால், நீண்ட கால கட்சிக்காரர். பல முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். கட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சசிகலாவின்  பாசத்தையும், நற்சான்றையும் பெற்றவர். இதனால் அவருக்கு முதல்வர் ஆகும் வாய்ப்பு கிடைத்தால் நான் மறுக்கமாட்டேன்.

அரசு கொறடா அனுப்பியதாக சொல்லப்படும் நோட்டீஸ், எங்களுக்கு கிடைக்கவில்லை. எங்களை அச்சுறுத்த வேண்டுமென்றே திட்டமிட்டு சதி செய்கின்றனர். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். கட்சியின் துணை பொதுச்செயலாளர் தினகரன்,  விரைவில்,  எங்களை சந்தித்து ஆலோசனை நடத்துவார். அவர் உறுதியாக வருவார். நான் ஏற்கனவே கூறியபடி எம்.எல்..க்கள் பலர் ஸ்லீப்பர் செல்லாக எங்களுடன்தான் இருந்து வருகின்றனர்.  வழக்கமாக மத்திய அரசிடம் திட்டங்களைத்தான் கேட்டு பெறுவார்கள். ஆனால், மோடி தலைமையிலான மத்திய அரசு அ.தி.மு..வை இணைப்பதில் மிகுந்த அக்கறை காட்டுகிறது. அவர்களுக்கு ஏன் இந்த அக்கறை என தெரியவில்லை. எங்கள் கட்சியின் அமைச்சர்களும், முதல்வரும் வாரம் ஒரு முறை பிரதமரையும், மத்திய மந்திரிகளையும் சந்திக்கின்றனர். பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமை செயலகம் வந்து வாழ்த்து தெரிவிக்கிறார். இவையெல்லாம் எதற்கென்றே புரியவில்லை என்றார்.