Home சுடச்சுட கேரளாவில், ரியல் எஸ்டேட் துறையில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் ரூ.6,000 கோடி...

கேரளாவில், ரியல் எஸ்டேட் துறையில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் ரூ.6,000 கோடி முதலீடு செய்ய திட்டம் திடுக்கிடும் தகவல் அம்பலம்

28
0
SHARE

திருவனந்தபுரம், ஆக.27& பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட சாமியார் குர்மீத் ராம் ரஹீம் கேரளாவில் ரியல் எஸ்டேட் துறையில் ரூ. 6000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள தகவல் அமபலமாகியுள்ளது.

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள குர்மீத் ராஜஸ்தான் மாநிலம், சிறி குருசார் மோதியா என்ற கிராமத்தில் பிறந்தவர்.

இவர் அரியானாவில் உள்ள சிர்சாவில் வசித்து வந்தார். இவருக்கு உலகமெங்கும் 5 கோடி ஆதரவாளர்கள் உள்ளனர். சிர்சாவில் உள்ள இவரது ஆசிரம வளாகம், 800 ஏக்கர் பரப்பளவிலானது.

இவர் ஆன்மிகவாதியாக வலம் வந்த இவர் முதலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தந்தார். பின்னர் பா...வுக்கு ஆதரவு அளித்தார். இவர் ஹர்ஜித் கவுர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஹனிபிரீத், சரண் பிரீத், அமர் பிரீத், ஜஸ்மீத் பிரீத் என 4 குழந்தைகள் உள்ளனர்.

தற்போது கற்பழிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டுள்ள இவர், 2 கொலை வழக்குகளிலும் சிக்கியுள்ளார்.

கேரளாவில் ரியல் எஸ்டேட் துறையில் 6,000 கோடி ரூபாயில் செய்ய திட்டமிடப்பட்ட தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்து உளவுத்துறை கேரள அரசுக்கு 2015ம் ஆண்டு அறிவித்துள்ளது

குர்மித் ஒரு மலையாள திரைப்பட நடிகருக்கு பெரிய தொகையை வழங்கியதாக வதந்திகள் கூட எழுந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அரியானா காவல் துறையினரின் முழு  பாதுகாப்பின் கீழ் கேரளாவிற்கு குர்மீத் பயணம் மேற்கொண்டு இருந்தார் அப்போது அது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.