Home மற்றவை தண்ணீர்குளம் அருகே எடப்பாடி அணியினர் வந்த காரை மறித்து தாக்குதல் 28 பேர்...

தண்ணீர்குளம் அருகே எடப்பாடி அணியினர் வந்த காரை மறித்து தாக்குதல் 28 பேர் மீது வழக்கு

31
0
SHARE

திருவள்ளூர், ஆக. 27& தண்ணீர் குளம் அருகே எடப்பாடி அணியினர் வந்த காரை மறித்து கொலை மிரட்டல் விடுத்த 28 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் டி..ஏழுமலை. தற்பொழுது தினகரன் அணி ஆதரவாளராக உள்ளார். தற்சமயம் தினகரனின் ஆதரவு எம்.எல்..க்கள் 19 பேர்கள் பாண்டிச்சேரியில் விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் கடந்த 24&ம் தேதி மாலை 3 மணியளவில் பூந்தமல்லி முன்னாள் அ.தி.மு.., எம்.எல்.. மணிமாறன் மற்றும் நேமம் கிராமத்தைச் சேர்ந்த சுகுமார் (36) உட்பட சிலர் காரில் தண்ணீர்குளத்தில் உள்ள ஏழுமலை எம்.எல்.. வீட்டிற்கு சென்றார்கள். அப்பொழுது ஏழுமலை எம்.எல்.. அங்கு இல்லை. ஆனால் அப்பகுதியை சேர்ந்த சிலர் திரண்டு வந்து முன்னாள் எம்.எல்.. மணிமாறன் வந்த காரை உருட்டுக்கட்டையால் அடித்து கண்ணாடிகளை உடைத்தார்களாம். அப்பொழுது அங்கு வந்த போலீசார் முன்னாள் எம்.எல்.. மணிமாறன் உட்பட காரில் வந்தவர்களை மீட்டு அனுப்பி வைத்தார்கள். இந்த தாக்குதல் பற்றி செவ்வாப்பேட்டை போலீஸில் நேமம் சுகுமார் புகார் செய்தார்.   

அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது : பூந்தமல்லி எம்.எல்.. ஏழுமலையை சந்தித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தருமாறு கேட்பதற்காக சென்றோம். அப்பொழுது அங்கு வந்த கும்பலை சேர்ந்தவர்கள் காரை அடித்து சேதப்படுத்தியும், என் கழுத்தில் இருந்த 5 சவரன் மதிப்புள்ள தங்க சங்கிலியை அறுத்தும் காரில் இருந்த ராஜகோபாலின் சட்டைப்பாக்கெட்டில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்தார்கள் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து தண்ணீர்குளம் பிரேம்குமார், பாலு, நடராஜன், திருமணி, குட்டி உட்பட 28 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகிறார்கள்.