Home சுடச்சுட இரு மாநிலங்களில் போலி இருப்பிட சான்றிதழ் வழங்கினாலோ, 2 இடங்களை தேர்வு செய்தாலோ...

இரு மாநிலங்களில் போலி இருப்பிட சான்றிதழ் வழங்கினாலோ, 2 இடங்களை தேர்வு செய்தாலோ நடவடிக்கை சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை

20
0
SHARE

சென்னை, ஆக.26& இரு மாநிலங்களில் இருப்பிட சான்றிதழோ, இரு மாநிலங்களில் இடங்களை தேர்வு செய்து தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தது தெரிந்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மருத்துப் படிப்பில் சேரும் மாணவர்களிடம் சில உறுதிமொழிப் படிவத்தை பூர்த்தி செய்து பெறுகிறோம். அப்போது நாங்கள் வேறு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து விட்டு, மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்கவில்லை. போலி இருப்பிட சான்றிதழ்களை அளிக்கவில்லை.

தமிழகத்தை சேர்ந்தவர்கள், தமிழகத்தினை பூர்விகமாக கொண்டவர்கள் இந்தியாவின் எந்த மாநிலத்தில் இருந்தாலும் இங்கு மருத்துவப்படிப்பில் சேரலாம் என விதிமுறை உள்ளது. அவ்வாறு விதிமுறை இருக்கும் போது, வேறு கல்லூரியில் மருத்துவப் படிப்பில் இடம் தேர்வு செய்து விட்டு இங்கு விண்ணப்பிக்கவில்லை என உறுதிமொழிப்படிவம் மாணவர்கள், பெற்றோர்களிடம் பெறுகிறோம்.

உச்சநீதிமன்றத்தின் வழக்கின் தீர்ப்பின் படி 2 கட்ட கலந்தாய்வு நடத்த வேண்டும். தாரேஸ்சாலம் வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான 2 கட்ட கலந்தாய்வில் கலந்துக் கொண்டு, இடங்களை தேர்வு செய்திருந்தால், அரசு, தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகம், பிற மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரியில் உள்ள இடங்களை தேர்வு செய்திருந்தாலும் அவர்கள் மீண்டும், ஒரு மாநில அரசின் ஒதுக்கீட்டு இடங்களுக்கு வர முடியாது என உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது.

தமிழகத்தில் கால தாமதம் ஏற்பட்டதால் சில பெற்றோர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களை தேர்வு செய்துள்ளனர். இது குறித்து மத்திய அரசிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் தெளிவாக அவர்கள் ஏற்கனவே எடுத்து இருந்தால் அந்த இடம் காலியாகிவிடும் என கூறியுள்ளனர். ஆனால் பெற்றோர்கள் வருத்தம் அடைகின்றனர். ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் அதுபோன்று உள்ளது. மாணவர்களோ, பெற்றோர்களோ போலியாக

நாங்கள் எந்த மருத்துவக் கல்லூரியிலும் சேரவில்லை என உத்தரவாதம் அளித்து, அதனை சரிபார்க்கும் போது இருப்பிட சான்றோ தவறாக இருப்பது தெரிந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களை தேர்வு செய்தவர்களுக்கும், தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் இடங்களை தேர்வு செய்தவர்களுக்கும் வருத்தம் உள்ளது. அவர்கள் தமிழக அரசு அவர்களுக்கு உதவவில்லை என தவறாக புரிந்துக் கொண்டுள்ளனர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி நடைபெறுவதால் தான் முடியவில்லை.

தரவரிசைப் பட்டியலில் மதிபெண் பெற்றும் இல்லாவிட்டால், அவர்களின் குறையை தீர்க்க மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு உடனடியாக குறைகள் தீர்க்கப்படும். மருத்துவக் கலந்தாய்வில் படிப்பதற்காக 9 பேர் 2 மாநிலங்களில் இருப்பிடச் சான்று பெற்றதாக தகவல் வந்தது. அதற்காகத்தான் இந்த உறுதிமொழிப் படிவம் பெறுகிறோம். தற்பொழுது அளிக்கப்படும் இருப்பிட சான்றிதழ் சரிபாக்கப்படும்.

தமிழக அரசின் மருத்துவக் கல்வி இடத்திற்கு தமிழக மாணவர்கள் தான் சேர வேண்டும். இது போன்று 2 மாநிலங்களில் இருப்பிட சான்றிதழோ, இரு மாநிலங்களில் இடங்களை தேர்வு செய்வதோ தெரிந்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பிட சான்றிதழ் யார் அளிக்க வேண்டும் என்பதை தகவல் கையேட்டில் அளித்துள்ளோம். அதன்படி வட்டாச்சியர் அளிக்க வேண்டும்.

இந்த ஆண்டு வெளி மாநிலத்தில் இருந்து தமிழக மாணவர்கள் என கூறி வந்து சேர்வதால் தான் இந்த பிரச்சனை வந்துள்ளது. தாருஸ் சலாம் வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு அளித்துள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி வேறு ஒரு இடத்தில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு இடம் தேர்வு செய்தவருக்கு இடம் அளித்தால் அந்த இடம் காலியா இருக்கும். காலி இடங்களை குறைக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது என தெரிவித்தார்.

பாக்ஸ்

நீட் தேர்வு எங்களுக்கும் வருத்தம்

மேலும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தெரிவிக்கையில், மாநில அரசு சட்டரீதியாகவும், சட்டமன்றத்தின் மூலமுல் அனைத்து சட்ட நடவடிக்கையையும் எடுத்த பின்னர், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்ததால் எந்த முடிவு எடுத்தாலும் ஏதாவது ஒரு புறம் பாதிப்பு ஏற்படும். அந்த பாதிப்பையும், வேதனையையும் உணருகிறோம். உச்சநீதிமன்ற தீர்ப்பு இருக்கும் போது, நாம் இது தான் செய்யக்கூடிய நிலை என்பதை மாணவர்கள், பெற்றோர்கள், நீட் மதிபெண் பெற்று அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள், 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவப்படிப்பில் இடம் கிடைக்காத மாணவர்கள் வருத்தை சொல்ல கடமைப்பட்டுள்ளோம். அரசுப் பள்ளி, அரசு அல்லதா பள்ளி இல்லாத மாணவர்களுக்கான பிரச்சனை அல்ல. சி.பி.எஸ்.இ., மாநிலப்பாடத் திட்ட மாணவர்களுக்கு இடையேயான பிரச்சனை அல்ல.  கொள்கை ரீதியாக சட்டம் வந்த போது, தமிழக அரசுதான் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என எதிர்த்தோம் என்றார்.