Home தமிழகம் பண்டிகைக்காக 20 சதவீத தள்ளுபடி ‘மெட்ரோ’ ரயில் கட்டணம் குறைந்தது நேரு பார்க்&...

பண்டிகைக்காக 20 சதவீத தள்ளுபடி ‘மெட்ரோ’ ரயில் கட்டணம் குறைந்தது நேரு பார்க்& விமானநிலையத்துக்கு 40 ரூபாய்

45
0
SHARE

சென்னை, ஆக. 26& சென்னை மெட்ரோ ரயிலில் இன்று முதல் பண்டிகை கால சலுகையாக 20 சதவீதம் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. நேரு பூங்கா& விமான நிலையத்துக்கு ரூ.48 கட்டணத்தில் பயணம் செய்யலாம்.

மெட்ரோ ரயில்

சென்னை மாநகர போக்குவரத்து நெறுக்கடியை குறைப்பதற்காகவும் பயணிகளின் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படுள்ளது.

கோயம்பேடு முதல் & விமான நிலையம் வரையில் உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் & நேரு பூங்கா வரை சுரங்க பாதையிலும் மெட்ரோ ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள், பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பெரிதும் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் பயணம் செய்ய நேரு பூங்கா முதல் & விமான நிலையம் வரை ரூ.60&ம் கோயம்பேடு முதல் விமான நிலையம் வரை ரூ.50 என்றும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. கட்டன சலுகை இந்த நிலையில் பண்டிகை கால சலுகையாக 20 சதவீதம் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இன்று (25&ந் தேதி) முதல் அக்டோபர் 31&ந் தேதி வரை 2 மாதங்களுக்கு கட்டண சலுகை அமலில் இருக்கும். அதன்படி நெரு பூங்கா & விமான நிலையத்துக்கு புதிய கட்டணம் ரூ.48, கோயம்பேடு & விமான நிலையம் வரை ரூ.40 என இன்று முதல் வசூல் செய்யப்படுகிறது. இதே போல் ‘ஸ்மார்ட் கார்டு’ களுக்கு 20 சதவீதம் கட்டண சலுகை அளிக்கபபட்டுள்ளது. மெட்ரோ ரெயிலில் கட்டணம் 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது குறித்து பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கட்டண குறைப்பை அனைவரும் வரவேற்றுள்ளனர்.

அதிகாரி பேட்டி இது குறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:& மெட்ரோ ரெயில் பயணம் சென்னை மக்களை கவர்ந்துள்ளது. அதிகப்படியான பயணிகள் மெட்ரோ ரெயில் விரைவு பயணத்தை நாடி வருகிறார்கள். 20 சதவீத கட்டண சலுகை இன்று முதல் அக்டோபர் 31 வரை அமர்வில் இருக்கும். பொதுமக்களிடையே இந்த கட்டண சலுகை வரவேற்பை தரும். இன்னும் கூடுதலாக பயணிகள் பயணம் செய்ய முன்வருவார்கள்.

நேரு பார்க்& விமான நிலையத்துக்கு ரூ. 48 கட்டணத்தில் இன்று முதல் பயணம் செய்யலாம். 21 கி.மீட்டர் விமான நிலைய தூரத்தை வெறும் 20 நிமிடங்களில் மெட்ரோ ரெயிலில் கடந்து செல்வது சென்னை மாநகரில் யாரும் நினைத்து பார்க்க முடியாத சாதனையாகும்.

அதிகப்படியான பயணிகள் விமான நிலையம் வரை பயணம் செய்கிறார்கள். கட்டண சலுகை அறிவிப்பு இன்னும்  2 மாதம் அமலில் இருக்கும். பொதுமக்கள், பயணிகள், குழந்தைகளுக்கு விழாக் கால கட்டண சலுகை தள்ளுபடியாக இதனை மெட்ரோ ரெயில் நிறுவனம் வழங்கி உள்ளது. அனைவரும் இதன் மூலம் பயன்பெற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.