Home சினிமா தயாரிப்பாளருக்கு உதவிய ஓவியா

தயாரிப்பாளருக்கு உதவிய ஓவியா

13
0
SHARE

ராஜதுரை இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள படம் ‘ஓவியாவ விட்டா யாரு’. இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். படத்தை மதுரை செல்வம் தயாரித்துள்ளார்.

இந்த படத்தை தயாரித்து பல ஆண்டுகள் ஆனபோதும் இன்னும் வியாபாரம் ஆகாமல் முடங்கிப்போயிருந்த்து. இந்நிலையில் படத்தில் நடித்த ஓவியாவுக்கு தற்போது உள்ள மார்க்கெட்டை வைத்து படத்தை ரிலீஸ் செய்து விடலாம் என்று தயாரிப்பாளர் செல்வம் முடிவு செய்து ஓவியாவிடம் பேசியிருக்கிறார். அவரும் படத்துக்கு எந்தவகையான ஆதரவையும் தர தயாராக இருப்பதாக் சொல்லி ஆதரவு தெரிவித்திருக்கிறார். இது பற்றி அவர் கூறும் போது, ‘‘ஓவியா இன்று வரை எனக்கு ஆதரவு அளித்து வருகிறார். அவரை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். ஓவியாவுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன்.

என் தயாரிப்பு பயணத்தில் தூண் போன்று உறுதுணையாக உள்ளவர் ஓவியா. இந்த நேரத்தில் நான் பலருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஆனால் என் வலி, வேதனையால் கண்ணீர்தான் வருகிறது.

நான் பல கஷ்டங்களை தாண்டி வந்துள்ளேன். என் மனைவி, குழந்தைகள் கூட என்னை கைவிட்டுவிட்டார்கள். ஆனால் எனக்கு ஆதரவாகவும், உதவியாகவும் இருந்தவர் ஒருவர் தான். அவர் தான் தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த கதிரேசன்.  கடந்த ஓராண்டாக நான் உயிருடன் இருக்க காரணமே கதிரேசன்தான். அவருக்கு எப்பொழுதும் நன்றி தெரிவித்துக் கொண்டே இருப்பேன். கதிரேசன், விஷால், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆதரவு இருக்கும் வரை நான் இன்னும் 5 படங்களை தயாரிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.

ஓவியாவ விட்டா யாரு படம் விரைவில் ரிலீஸாகும். என் கஷ்ட காலத்தில் என்னுடன் இருந்த டிசைனர் ஸ்ரீதர், மேனேஜர் சுவாமிநாதனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் செல்வம்.