Home மற்றவை தங்கம் விலை பவுனுக்கு  ரூ. 198 உயர்ந்தது

தங்கம் விலை பவுனுக்கு  ரூ. 198 உயர்ந்தது

13
0
SHARE

சென்னை, டிச. 24&

கடந்த (நவம்பர்) மாதம் தங்கம் விலை பவுன் ரூ.22 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆனது. தொடர்ந்து விலை குறைந்து இம்மாத மத்தியில் பவுன் ரூ. 22 ஆயிரத்துக்கும் கீழ் விற்கப்பட்டது. கடந்த 14&ம் தேதி ஒரு பவுன் ரூ. 21 ஆயிரத்து 872 ஆக இருந்தது.

பின்னர் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் நேற்று முன்தினம் பவுன் ரு. 21 ஆயிரத்து 952 ஆக இருந்தது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 192 உயந்து ஒரு பவுன் ரூ. 22 ஆயிரத்து 120 ஆக உள்ளது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ. 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கிராமுக்கு ரூ. 21 அதிகரித்து ரூ.2,765&க்கு விற்கிறது. பங்கு சந்தையில் முதலீடு அதிகரிப்பும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெள்ளி கிலோவுக்கு ரூ. 400 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ தங்கம் ரூ.40 ஆயிரத்து 600 ஆகவும், ஒரு கிராம் ரூ. 40.60 ஆகவும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here