Home சிறப்புச் செய்திகள் இலவச வைத்தியர் வைட்டமின் ‘ஞி’

இலவச வைத்தியர் வைட்டமின் ‘ஞி’

13
0
SHARE

மருத்துவம் சரிவர இல்லாத காலத்தில் ஆரோக்கியமாய் இருந்தும், மருத்துவம் வளர்ந்த நேரத்தில் நோயாளிகளாக வாழ்வதும் காலத்தின் கோலம் போலும் என்ற சொல்லிற்க்கிணங்க அந்த சொல்லுக்கு வலு சேர்க்கும் விதமாக நோய்கள் அதிகரிக்க அதிகரிக்க மருத்துவ உலகமும் பல்வேறு பாகங்களில் பல்வேறு விதமான ஆராய்ச்சிகளைச் செய்து புதுப்புது நோய்களையும் புதுப்புது மருந்துகளையும் கண்டுபிடித்துக் கொண்டுதான் இருக்கிறது.எல்.கே.ஜி. வகுப்பில் குழந்தைகளுக்கு ஏ,பி,சி,டி,இ என்று வரிசையாக சொல்லிக் கொடுப்பதை போல் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துகளுக்கும் ஏ,பி,சி,டி,இ என்று வரிசையாக பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது. அதில் நான்காவதாக உள்ள வைட்டமின் ‘டி’ யைப் பற்றிய விழிப்புணர்வு மருத்துவ உலகில் சமீப காலங்களில் அதிகமாகி வருகிறது.

உடலின் பல்வேறு இடங்களில் ஏற்படும் பல்வேறு விதமான புற்று நோய்களிலிருந்து உடலைக் காப்பதிலும், சர்க்கரை வியாதி, இதய நோய், மல்டிபிள் ஸ்கிலிரோசிஸ்(னீuறீtவீஜீறீமீ sநீறீமீக்ஷீஷீsவீs) மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களின் மூலமாக ஏற்படவிருக்கும் ஆபத்துகளை குறைப்பதிலும் வைட்டமின் ‘டி’ மிக மிக முக்கியமானதாக இருப்பதாக சமீப கால ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனிதன் ஆரோக்கியமாக வாழ அளவான உணவு, போதுமான வைட்டமின்கள் சத்து மற்றும் தேகப்பயிற்சி ஆகியவை மிகமிக முக்கிய மானதாக கருதப்படுகின்றன. பால், மீன்எண்ணெய், முட்டை, ஈரல், இறைச்சி, கொழுப்பு, தானியங்கள் ஆகியவற்றில் இயற்கையாகவே வைட்டமின் ‘டி’ சத்து மிகக்குறைவான அளவில் உள்ளது. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுப் பொருள்களில் வைட்டமின் பீ சேர்க்கப்படுகிறது. உணவுப் பொருள்களில் வைட்டமின் ‘டி’ யைச் சேர்ப்பது வெளிநாடுகளில் ரொம்ப அதிகம்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் சுமார் 250 மில்லி லிட்டர் பாலில் சுமார் 100 யூனிட் வைட்டமின் ‘டி’ ஏற்கனவே இயற்கையாக இருக்கிறது. இது போக ஒரு குறிப்பிட்ட அளவு வைட்டமின் ‘டி’ யும் சேர்க்கப்படுகிறது. 100 கிராம் சால்மன் மீனில் சுமார் 600 யூனிட் வைட்டமின் ‘டி’ இருக்கும். சுமார் 1000 யூனிட் முதல் 2000 யூனிட் வரை ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்கு வைட்டமின் ‘டி’ முக்கியத் தேவை.

வைட்டமின் ‘டி’ உடலில் இருக்க வேண்டிய அளவை விட மிகக் குறைவாக இருந்தால் ரிக்கெட்ஸ்(ஸிமிசிரிணிஜிஷி) என்று சொல்லக்கூடிய வியாதியும், ஆஸ்டியோ மலேசியா என்னும் வியாதியும் ஏற்படும். மேற்கூறிய இந்த இரண்டு நோயிலும் நம் உடலிலுள்ள எலும்புகள் மிக ஸ்டிராஸ்காக மிகச் சக்தியாக, மிக பலமாக இரும்புப் பேல் இருப்பதற்கு பதிலாக மிகமிகமென்மையாக, மிகமிக மிருதுவாக, லேசாக அடிப்பட்டால் ரொம்ப ஈசியாக உடைந்து போகக் கூடிய தன்மையில் இருக்கும் எனவே மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

வைட்டமின் ‘டி’ நம் உடலில் இருக்க வேண்டிய அளவை விட குறைவாக இருந்தால் என்னென்ன பாதிப்புகளை உண்டு பண்ணுகிறது என்று பார்ப்போம். வைட்டமின் ‘டி’ குறைவாக இருந்தால் சர்க்கரை வியாதி அதிகமாகி கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பது தடுக்கப்படுகிறது.

ஒல்லியாக இருப்பவர்களுக்கு ஒரு மடங்கு என்றால் மிகவும் குண்டாக இருப்பவர்களுக்கு வைட்டமின் ‘டி’ இரண்டு மடங்கு தேவைப்படுகிறது. சோரியாசிஸ் என்று சொல்லக்கூடிய சரும நோய்க்கு சிறந்த மருந்தாக வைட்டமின் ‘டி’ உலகம் முழுவதும் உபயோகப்படுத்தப்படுகிறது.

உடல் முழுக்க தசைவலி, தசைகள் தலர்வாக இருத்தல், உடம்பு வலி இவை எல்லாமே நாள்பட்ட வைட்டமின் ‘டி’ சத்துக் குறைவினால் ஏற்படுகிறது. வைட்டமின் ‘டி’ உடலில் குறைவாக இருப்பவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது. வைட்டமின் ‘டி’ உடலில் போதுமான அளவு இருந்தால் முக்கால் வாசி நோய் வராமல் பாதுகாப்பாக இருக்கலாம், என்பதை மேலே கூறியதை படிக்கும்போதே நீங்கள் உணரலாம்.

ஆனால் நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களில் வைட்டமின் ‘டி’ குறைவான அளவுதான் இருப்பதாகச் சொல்கிறீர்கள். ஒரு டம்ளர்(250 மில்லி) பாலில் 100 யூனிட் தான் வைட்டமின் ‘டி’ இருக்கிறது என்கிறீர்கள். பத்து பெரிய டம்ளரில் பால் குடித்தால் கூட ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் ‘டி’ கிடைக்காது போல் தெரிகிறது. பின் எப்படித்தான் உடலுக்குத் தேவையான வைட்டமின் ‘டி’ கிடக்கும்? என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. ஒரு காசு கூட செலவழிக்காமல் உலகிலேய மிகவும் மலிவாகக் கிடைக்க கூடிய ஒன்று வைட்டமின் ‘டி’ மட்டும் தான். உங்கள் உடம்பில் சூரிய ஒளி அதாவது வெயில் பட்டாலே உங்கள் உடம்பு வைட்டமின் ‘டி’ யை உருவாக்க ஆரம்பித்து விடுகிறது.

வைட்டமின் ‘டி’ சூரிய ஒளி மூலமாக உடலில் உருவாகிறது என்பது நிறைய பேருக்குத் தெரியாது. மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் வைட்டமின் ‘டி’ உருவாகத் தேவையான சூரிய ஒளியை டப்பாவில் பிடித்து விற்க முடியாது. அதனால் வைட்டமின் ‘டி’ யைப்பற்றிய விளம்பரங்கள் கிடையாது.

அதனால்தான் மக்களுக்கும் வைட்டமின் ‘டி’ யைப்பற்றி அவ்வளவாகத் தெரியவில்லை. வைட்டமின் ‘டி’ இயற்கையாகக் கிடைக்க மிகச்சிறந்த வழி சூரிய ஒளி மட்டுமே. உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் மூலாதாரமே சூரிய ஒளி தான். இயற்கையான மிக சக்தி வாய்ந்த , மிகவும் பயனுள்ள சூரிய ஒளி நம் உடலின் மீது படுவதே நாம் தட்டிக்கழிக்கும் வைட்டமின் ‘டி’ நமது உடலுக்கு கிடைத்து விடும் அன்றாடம் தேவைப்படும் 90 சதவீத வைட்டமின் ‘டி’ சத்து சூரிய ஒளி நம் உடல் மீது படுவதால் தான் கிடைக்கிறது நம்மூரில் பல மணி நேரம் வெயில் அடிக்கிறது.

எனவே வெயிலை நாம் எல்லோரும் பயன்படுத்தி உடலுக்குத் தேவையான வைட்டமின் ‘டி’ சத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். சரும் புற்று நோய், மார்பக புற்று நோய் போன்றவற்றை தடுக்கும் காரணியாக வைட்டமின் ‘டி’ உள்ளது. ஒரு நாளைக்கு பத்து நிமிடங்கள் சூரிய ஒளியில் நின்றாலே உடலுக்குத் தேவையான வைட்டமின் ‘டி’ சத்தை ஓரளவாது நம் உடலில் ஏற்றுக் கொள்ளலாம்.

நம்முடைய வளமான ஆரோக்கியமான வாழ்விற்கு வைட்டமின் ‘டி’ மிகவும் இன்றியமையாத ஒரு காரணியாக உள்ளதை எவரும் மறுக்க முடியாத ஓர் உண்மை இயற்கையின் அற்புத சக்தியாகவும் சூரிய ஒளி கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here