Home சினிமா தங்கையின் நடிப்பை பாராட்டிய அக்கா

தங்கையின் நடிப்பை பாராட்டிய அக்கா

16
0
SHARE

 நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாஸனை அடுத்து அவரது தங்கை அக்ஷரா ஹாஸன் கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார்.

அவர் நடித்துள்ள விவேகம் படம் ரிலீஸாகியுள்ளது. படத்தை  அக்ஷராவுடன் பார்ப்பதாக கமல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அப்பாவும், அக்ஷராவும் தியேட்டேருக்கு போகிறார்கள். அக்கா ஸ்ருதி எங்கே என்று கேள்வி எழுந்துள்ளது. ஸ்ருதி நாட்டிலேயே இல்லை.

அவர் லண்டனில் உள்ளார். லண்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதை ஸ்ருதி ஹாஸனே புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். ஸ்ருதி லண்டனை சேர்ந்த நாடக நடிகரை காதலிக்கிறார் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. லண்டனில் இருந்தாலும் ஸ்ருதி தனது தங்கையை வாழ்த்த தவறவில்லை.

விவேகம் படக்குழுவுக்கு அவர் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அக்ஷராவின் இன்ட்ரோ சீன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவரின் நடிப்பை பார்த்தவர்கள் புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்று தெரிவித்துள்ளனர்.