Home இந்தியா யூகத்தின் அடிப்படையில் வதந்தி பரப்பப்பட்டு உள்ளது ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாபஸ் பெறும்...

யூகத்தின் அடிப்படையில் வதந்தி பரப்பப்பட்டு உள்ளது ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாபஸ் பெறும் திட்டம் கிடையாது நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தகவல்

11
0
SHARE

புதுடெல்லி, டிச.23&

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறும் திட்டம் இல்லை என்று விளக்கம் அளித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, யூகங்களின் அடிப்படையில் வதந்தி பரப்பப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.

கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8&ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் புழக்கத்தில் இருந்த பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார்.இதையத்து அதற்கு மாறாக புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரப்ப்பட்டு உள்ளது. அதில் ஒன்று, மத்திய அரசு ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெற உள்ளது என்பது. இதனை மத்திய அரசு நிராகரித்தது.

இந்த நிலையில் புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விடுவதையும், புதியதாக அச்சடிப்பதையும் ஆர்பிஐ நிறுத்தலாம் என பாரத ஸ்டேட் வங்கி அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

இதனையடுத்து மத்திய அரசு புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுகிறது என தகவல்கள் பரவியது. அதனை மத்திய அரசு மறுத்து உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேசுகையில், ”யூகங்கள் உருவாகிவருகிறது. இதுபோன்ற வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.

அவை அனைத்தும் தவறானவை. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் அரசு தரப்பில் அறிவிக்கப்படாத வரையில் இதனை நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here