Home இந்தியா மும்பையில் செயல்பட இருந்த டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் திட்டத்தில் பின்னடைவா? மெட்ரோ...

மும்பையில் செயல்பட இருந்த டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் திட்டத்தில் பின்னடைவா? மெட்ரோ கழகம் விளக்கம்

5
0
SHARE

மும்பை, டிச. 23&

மும்பையில் செயல்பட இருந்த டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் திட்டத்தில் பின்னடைவா? என்பது குறித்து மும்பை மெட்ரோ கழகம் (எம்.எம்.ஆர்.சி.) விளக்கம் அளித்து உள்ளது.

மும்பையில் தகிசர் டி.என்.நகர், டி.என்.நகர் மான்கூர்டு, தகிசர் கிழக்கு அந்தேரி கிழக்கு, கொலபா சீப்ஸ் இடையே மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த வழித்தடங்களில் டிரைவர் இல்லாமல் தானியங்கி மெட்ரோ ரயில்களை இயக்க மும்பை மெட்ரோ ரயில் கழகம் (எம்.எம்.ஆர்.சி.) திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் டிரைவர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடந்தது.

இதில், அந்த ரயில் தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து மும்பையில் டிரைவர் இல்லாமல் மெட்ரோ ரெயில்களை இயக்கும் திட்டத்தில் இருந்து மெட்ரோ ரயில் கழகம் பின்வாங்கி உள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:& மெட்ரோ திட்ட பணிகள் முடிந்த பிறகு டிரைவர் இல்லா மெட்ரோ ரயில்களை இயக்க யோசித்து இருந்தோம். ஆனால் தற்போது திட்ட பணிகள் முடிந்த பிறகு முதல் 3 ஆண்டுகளுக்கு டிரைவர்கள் தான் மெட்ரோ ரயில்களை இயக்குவார்கள். அதன்பிறகு தான் டிரைவர் இல்லாமல் மெட்ரோ ரெயில்கள் இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.