Home இந்தியா 5&வது நாளாக காங்கிரஸ் தொடர்ந்து அமளி பாராளுமன்றம் 27&ந் தேதி வரை ஒத்தி வைப்பு

5&வது நாளாக காங்கிரஸ் தொடர்ந்து அமளி பாராளுமன்றம் 27&ந் தேதி வரை ஒத்தி வைப்பு

13
0
SHARE

 

புதுடெல்லி, டிச. 23&

பிரதமர் நரேந்திர மோடி, மன்மோகன் சிங் குறித்து கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரசார் பாராளுமன்றத்தை 5&வது நாளாக நேற்றும் முடக்கினர். இதையடுத்து பாராளுமன்றம் 27&ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது  பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீது குற்றம்சாட்டி இருந்தார். குஜராத் சட்டசபை தேர்தல் தொடர்பாக பாகிஸ்தான் தூதருடன் மன்மோகன்சிங் ஆலோசனை நடத்தினார் என்று குற்றம் சாட்டினார். பாகிஸ்தானுடன் இணைந்து காங்கிரஸ் சதி திட்டம் தீட்டுவதாக கூறி இருந்தார். பாகிஸ்தான் தூதருடன் சந்தித்த விவகாரத்தை முதலில் காங்கிரஸ் மறுத்தது. பின்னர் இது சாதாரண சந்திப்பு என்று விளக்கம் அளித்து இருந்தது.

இந்த விவகாரம் தற்போது பாராளுமன்றத்தில் எதிரொலித்துள்ளது. இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும் என்று என்று  கோரி பாராளுமன்றத்தின் இரு அவையிலும்  காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மோடி மன்னிப்பு கேட்க மாட்டார்  என்று  டெல்லி மேல்சபை  தலைவர் வெங்கையாநாயுடு தெரிவித்து இருந்தார்.

நேற்று முன்தினம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூச்சல் குழப்பத்தால் டெல்லி மேல்சபையில் நியமன எம்.பி.யான சச்சின் தெண்டுல்கரின் கன்னி பேச்சு தடைப்பட்டது. டெல்லி மேல்சபையில் இன்று 6வது நாளாக காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி  கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இந்த அமளி காரணமாக டெல்லி மேல்சபை வருகிற 27&ந் தேதி வரை  ஒத்தி வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here