Home மற்றவை பாராளுமன்றத்தில் பேசவிடாமல் காங்கிரஸ் இடையூறு: சமூக வலைதளத்தில் கருத்தை வெளியிட்ட தெண்டுல்கர் விளையாட்டு...

பாராளுமன்றத்தில் பேசவிடாமல் காங்கிரஸ் இடையூறு: சமூக வலைதளத்தில் கருத்தை வெளியிட்ட தெண்டுல்கர் விளையாட்டு கலாசாரத்தை மேம்படுத்த வேண்டுகோள்

11
0
SHARE

புதுடெல்லி, டிச. 23&

பாராளுமன்றத்தில் பேசவிடாமல் காங்கிரஸ் இடையூறு செய்ததால், சச்சின் தெண்டுல்கர் தனது பேச்சை தொடர முடியாமல் போனது. இந்த நிலையில் தனது கருத்தை நேற்று அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் டெல்லி மேல்&சபையின் நியமன உறுப்பினராக உள்ளார். அவர் கடந்த 2012&ம் ஆண்டு முதல் எம்.பி.யாக இருந்த போதும் இதுவரை விவாதங்களில் எதுவும் பங்கேற்கவில்லை.

முதல் முறையாக நேற்று தனது கன்னிப்பேச்சை நிகழ்த்த அவர் அனுமதி கேட்டிருந்தார்.

விளையாட்டு உரிமை மற்றும் இந்திய விளையாட்டின் எதிர்காலம் குறித்த விவாதத்தில் பங்கேற்பதற்காக அனுமதி கேட்டிருந்த அவருக்கு, அவைத்தலைவர் வெங்கையா நாயுடுவும் அனுமதி வழங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் மேல்&சபை முதல் முறை ஒத்திவைக்கப்பட்டு, 2 மணிக்கு கூடிய போது தெண்டுல்கரை உரையாற்ற வெங்கையா நாயுடு அழைத்தார். அப்போது மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு வெளியிட்ட பிரதமர் மோடி மன்னிப்பு கேட்குமாறு காங்கிரசார் அமளியில் ஈடுபட்டதால் தெண்டுல்கரால் உரையாற்ற முடியவில்லை.

தனது இடத்தில் எழுந்து நின்று காங்கிரசாரின் அமளியை வேடிக்கை பார்த்துக்கொண்டே நின்றார். தெண்டுல்கர் ஒரு கிரிக்கெட் ஜாம்பவான் என்றும், பாரத ரத்னா விருது பெற்றவர் என்றும் கூறிய வெங்கையா நாயுடு, அவரது பேச்சு இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என்பதால் அவரை பேச அனுமதிக்குமாறு காங்கிரசாரை கேட்டுக்கொண்டார்.

எனினும் காங்கிரசார் அமைதியடையாததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் தெண்டுல்கர் மிகவும் ஏமாற்றமடைந்தார். மாநிலங்களவையில் அமளி காரணமாக அமைதியாக அமர்ந்த சச்சின் தெண்டுல்கர் தன்னுடைய கருத்தை பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளார்.

வடகிழக்கு இந்தியாவில் விளையாட்டு துறையை வெகுவாக சச்சின் தெண்டுல்கர் “இந்தியா விளையாட்டை நேசிக்கும் தேசத்தில் இருந்து விளையாட்டுகளை விளையாடும் தேசமாகவேண்டும், எல்லோரும் செயல்பட வேண்டும், விளையாட்டு போட்டிகளில் கலந்துக் கொள்ள வேண்டும்.

விளையாட்டு கற்பிக்கப்படவேண்டும். நம்முடைய தேசத்தில் விளையாட்டு கலாச்சாரத்தை மேம்படுத்த வேண்டும். வடகிழக்கு மாநிலங்கள் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்குகிறது என்பதற்கு தீபா கர்மாகர், மேரிகோம், மிராபி சானு உள்ளிட்டோருக்கு எனது பாராட்டுகள்.

இந்தியாவில் வெறும் 4 சதவித மக்கள் தொகையை மட்டுமே வடகிழக்கு மாநிலங்கள் கொண்டு உள்ளது. துடிப்பான விளையாட்டு கலாச்சாரத்தை கொண்டு உள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவிற்கு பல விளையாட்டு நட்சத்திரங்களை கொடுத்து உள்ளது.

மேரிகோம், மேரி கோம், சமீபத்தில் சாம்பியன் பட்டம் வென்ற மீராபாய் சானு, தீபா கர்மாகர், பாய்ச்சுங் பூட்டியா(முன்னாள் கால்பந்து அணி கேப்டன்), சரைதா தேவி, சஞ்சித சானு மற்றும் பலரை வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவிற்கு கொடுத்து உள்ளது. இந்தியா விளையாட்டை நேசிக்கும் தேசத்தில் இருந்து விளையாட்டுகளை விளையாடும் தேசமாக வேண்டும் என்பதற்கு இது என்னுடைய முயற்சியாகும். இந்த நடவடிக்கையில் நீங்கள் அனைவரும் பங்குகொள்ள வேண்டும் என உங்கள் அனைவரையும் வலியுறுத்துகிறேன்.

என்னுடைய மற்றும் நம்முடைய கனவை நினைவாக்க உதவிசெய்யுங்கள், கனவுகள் நினைவாகும்! ஜெய் ஹிந்த்! என சச்சின் தெண்டுல்கர் குறிப்பிட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here