Home மற்றவை இன்போசிஸ் தலைவராக நந்தன் நிலகேனி மீண்டும் நியமனம்

இன்போசிஸ் தலைவராக நந்தன் நிலகேனி மீண்டும் நியமனம்

32
0
SHARE

பெங்களூரு, ஆக. 26&  இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாகம் அல்லாத தலைவராக நந்தன் நிலகேனி நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்போசிஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மற்றும் தலைமை செயல் இயக்குனர் பதவிகளை விஷால் சிக்கா சமீபத்தில் ராஜினாம செய்தார். இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர்.சேஷசாயி, இணைத்தலைவர் ரவி வெங்கடேசன் ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாம செய்தனர்.

இதனை, இன்போசிஸ் நிர்வாக குழு ஏற்றுக் கொண்டது. இருப்பினும், ரவினெங்கடேசன் நிர்வாகக் குழுவில் இயக்குனராகத் தொடர்ந்து பணியாற்றுவார் என்று கூறப்பட்டது. நிர்வாகிகள் ராஜினாமாவால் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்தித்தன.

விசாகெடுபிடிகள் போன்றவற்றால் இன்போசிஸ் நிறுவனம் சிக்கல்களை சந்தித்தது. தற்போது அதை சரிசெய்ய, நந்தன்நிலகேனியை இன்போசிஸ் மீண்டும் அழைத்துள்ளது. பெரும்பாலான முதலீட்டாளர்கள் நந்தன் நிலகேனி மீண்டும் நிறுவனத்திற்கு தலைமை ஏற்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 1981ம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தை தொடங்கிய 7 நிறுவனர்களில் நந்தன் நிலகேனியும் ஒருவர் ஆவார். கடந்த 2002, 2007ம் ஆண்டுகளுக்கு இடைபட்ட காலத்தில் நந்தன் நிலகேனி இன்போசிஸ் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். 2009ம் ஆண்டு ஆதார் அட்டை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதால் நிலகேனி இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து விலகினார்.

தற்போது அவர் இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாகம் அல்லாத தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நிலகேனி இன்போசிஸ் நிறுவனத்துக்கு திரும்புவதாக செய்திகள் வெளியானதுமே இன்போசிஸ் நிறுவன பங்குகள் சுமார் 2.8 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளன.