Home விளையாட்டு ஷாருக் கானை முந்திய விராட் கோலி

ஷாருக் கானை முந்திய விராட் கோலி

6
0
SHARE

மும்பை, டிச. 22& இந்தியாவின் விலைமதிப்புமிக்க பிரபலங்கள் பட்டியலில் இந்தி நடிகர் ஷாருக்கானை விராட் கோலி முந்தியுள்ளார்.

இந்தியாவின் மிகவும் விலை மதிப்பு மிக்க பிரபலமானவர்கள் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. பன்னாட்டு மதிப்பு மற்றும் விளம்பரம் மூலம் அவர் சம்பாதிக்கும் பணம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்து இந்த பட்டியல் வெளியிடப்படும்.

2017ம் ஆண்டுக்கான விலை மதிப்புமிக்க பிரபலமானவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தை பிடித்தார். அவர் பாலிவுட் பிரபலம் ஷாருக்கானை முந்தினார்விராட் கோலியின் விலை மதிப்பு இந்த ஆண்டில் ரூ.923 கோடியாகும். கிரிக்கெட்டின் 3 நிலைகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) அவரது ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது.

இதனால்தான் கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த ஷாருக்கானை அவர் இந்த ஆண்டில் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்திருக்கிறார். 2016ம் ஆண்டு விலை மதிப்பில் கோலி 2வது இடத்தில் இருந்தார். விலை மதிப்பு மிக்க பிரபலமானவர்கள் பட்டியலில் ஷாருக்கான் 2வது இடத்தில் உள்ளார். அவரது மதிப்பு ரூ.679 கோடியாகும்.

நடிகை தீபிகா படுகோனே (ரூ.595 கோடி) 3வது இடத்திலும், அக்ஷய் குமார் (ரூ.301 கோடி) 4வது இடத்திலும், ரன்விர்சிங் (ரூ.269 கோடி) 5வது இடத்திலும், சல்மான்கான் (ரூ.250 கோடி) 6வது இடத்திலும் உள்ளனர்இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் விலை மதிப்பு ரூ.134 கோடியாகும். 2014ம் ஆண்டில் தான் அவரது மதிப்பு அதிகபட்சம் ரூ.460 கோடியாக இருந்தது.