Home சம்பவம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

1
0
SHARE

செங்கம், டிச. 22&  செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டி.எஸ்.பி.  சுந்தரமூர்த்தி முன்னிலையில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பொரசப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் என்பவரின் மகன் ஸ்ரீகாந்த்(23), இவர் டைலராக வேலை செய்கிறார். இதே கிராமத்தை சேர்ந்த திருமுருகன் என்பவரின் மகள் மோனிஷா(20), செவியலியராக பணிபுரிகிறார். இவர்கள் இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டு கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள்.

இருப்பினும் இவர்களது காதலை மோனிஷாவின் பெற்றோர் ஏற்கவில்லை. மேலும் இவர்களை திருமணம் செய்ய விடாமல் தடுத்ததுடன் மிரட்டியுள்ளனர்இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்வது என முடிவெடுத்து, நேற்று செங்கம் அடுத்த மண்மலை முருகர் கோவிலில் இந்து சம்ரதாயப்படி திருமணம் கொண்டுள்ளனர்மேலும், இருவரும் ஸ்ரீகாந்தின் வீட்டிலேயே தங்குவது என முடிவெடுத்துள்ளனர்.

ஆனால், இவர்களுக்கு மோனிஷாவின் பெற்றோர்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சி, திருமணம் முடிந்த உடன் இருவரும் செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் வந்து டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தியிடம் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர். உடனே அவர் இந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கு பரிந்துரை செய்தார்.

இதனையடுத்து இருதரப்பு பெற்றோர்களையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அதற்கான முயற்சி செய்தனர். ஆனால் தமது மகளின் காதல் திருமணத்தை மோனிஷாவின் தந்தை திருமுருகன் ஏற்கவில்லை.

பின்னர் காவல் துறையினர், இருவரும் சட்டப்படி மேஜர் என்பதால் அவர்களது திருமணத்தை யாரும் எதிர்க்க முடியாது என்றும், இந்த ஜோடியை யாரேனும் இடையூறு செய்தால் அவர்களின் மீது சட்டப்படி  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்மேலும், காதல் ஜோடியை உறவினர் வீட்டிற்கு பாதுகாப்புடன் அனுப்பிவைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here