Home விளையாட்டு தோனி, புவனேஸ்வர் அசத்தலில் இந்தியா வெற்றி

தோனி, புவனேஸ்வர் அசத்தலில் இந்தியா வெற்றி

29
0
SHARE

கொழும்பு, ஆக. 26&

இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. அபாரமாக ஆடிய புவனேஸ்வர் குமார் அரைசதம் அடித்தார்.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என முழுமையான தொடரில் விராத் கோலி தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் 2வது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் பகலிரவு பல்லகேலா மைதானத்தில் நடந்தது.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் இடையே மழை பெய்தது. இதையடுத்து போட்டி 47 ஓவராக குறைக்கப்பட்டது. துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித, தவான் ஜோடி களம் கண்டனர்.

அதிரடியாக இந்த ஜோடி ஆடியது. இதையடுத்து இந்திய அணியின் ரன் மளமளவென உயர்ந்தது. அணியின் ஸ்கோர் 109 ஆக இருந்த போது 54 ரன்கள் எடுத்திருந்த ரோகித் சர்மா, தனன்ஜெயா பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அடுத்த 49 ரன்னிலும் தவானும் நடையை கட்ட 113 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்திருந்தது.

தொடர்ந்து வந்த ராகுல், கேதர் ஜாதவ் மற்றும் கேப்டன் விராத் கோலி ஆகியோர் தனன்ஜெயா வீசிய ஒரே ஓவரில் அவுட் ஆனர். அந்த ஓவரில் பாண்ட்டேயும் அவுட் கண்டத்தில் இருந்து தப்பினார். எனினும் சிறிது நேரத்தில் அவரும் அவுட் ஆனார்.

இந்த நிலையில் இந்தியா இக்கட்டான நிலையில் தத்தளித்தது. அப்போது தோனி புவனேஸ்வர் குமார் சிறப்பாக ஆடி, இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. சிறப்பாக விளையாடிய குமார், அரை சதம் அடித்தார். கடைசி வரை அவுட் ஆகாமல் டோனி 45 ரன்கள் எடுத்தார். 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி சிறப்பான வெற்றியை பெற்றது. 10 ஓவர்கள் வீசி 54 ரன்கள் விட்டுகொடுத்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றிய அகிலா தனன்ஜெயா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.