Home தமிழகம் வட்டாட்சியர்அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ச.ம.க.வினர் போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

வட்டாட்சியர்அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ச.ம.க.வினர் போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

12
0
SHARE

ஆம்பூர், டிச. 21&

ஆம்பூர் அருகே பல ஆண்டுகளாக சாலைவசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழும் கிராம மக்களுக்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற சமத்துவ மக்கள் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியான பனந்தோப்பு பகுதியில் சுமார் 30&க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 50 ஆண்டு காலமாக வாழ்ந்து வருகின்றனர்.

மேலும்அப்பகுதியில் 300 ஏக்கர் விவசாய நிலங்களும் உள்ளன. இந்நிலையில் அப்பகுதி மக்களுக்கு கடந்த 50 ஆண்டு காலமாக மின்சாரம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்ற அரசு சலுகை பெரும் அடையாள அட்டைகளும் இல்லாமல் அவர்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

மேலும் இது சம்பந்தமாக பலமுறை அரசு துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஞானதாஸ் தலைமையில் அக்கட்சியினர் 100&க்கும் மேற்பட்டோர் ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர்வட்டாட்சியர்மீராபெண்காந்திகிராமமக்களிடம்பேச்சுவார்த்தைநடத்திதிருப்பத்தூர்சாராட்சியரிடம்முறையிடுமாறுஅறிவுரைவழங்கினார்.