Home தமிழகம் நரம்பியல் துறையில் இயன்முறை மருத்துவம் எஸ்.ஆர்.எம். பல்கலை.யில் தேசிய கருத்தரங்கம்

நரம்பியல் துறையில் இயன்முறை மருத்துவம் எஸ்.ஆர்.எம். பல்கலை.யில் தேசிய கருத்தரங்கம்

27
0
SHARE

சென்னை, டிச. 20& நரம்பியல் துறையில் இயன்முறை மருத்துவத்தின் மேம்பாடு குறித்து எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் கீழ் செயல்படும் எஸ்.ஆர்.எம். இயன்முறை சிகிச்சை கல்லூரியின் 25ம் ஆண்டு விழா நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தேசிய அளவிலான 2 நாட்கள் மாநாடு நடைபெற்றது.

நரம்பியல் துறையில் இயன்முறை சிகிச்சையின் புதிய வழிமுறைகள் குறித்து இந்த  மாநாட்டில் துறையின் வல்லூநர்கள் பேசினர். தனிமனித வாழ்விற்கு இயன்முறை மருத்துவத்தின் முக்கியத்துவம், வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டது. கருத்தரங்கினை எஸ்.ஆர்.எம் மருத்துவம் மற்றும் உடல்நல அறிவியல் இயக்குனர் சந்திரபிரபா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் நரம்பியல் நிபுணர் ஜெ.பாஸ்கரன்,      எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி துணைமுதல்வர் கிரீஷ், எஸ்.ஆர்.எம் இயன்முறை சிகிச்சை கல்லூரி முதல்வர் மலர்விழி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.