Home இந்தியா இந்தியா & நேபாளம் இடையே இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின

இந்தியா & நேபாளம் இடையே இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின

24
0
SHARE

புதுடெல்லி,ஆக 26 டெல்லியில், பிரதமர் மோடியுடன் நேபாள பிரதமர் ஷெர் பகதுர் துபா பேச்சுவார்த்தை நடத்தினார்.பின்னர் இரு நாடுகளிடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

நேபாள பிரதமர் ஷெர் பகதுர் துபா இந்தியாவுக்கு வந்துள்ளார். நேற்று டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடிஷெர் பகதுர் துபா இடையே பேச்சுவார்த்தை நடத்தினார்.

நீர்ப்பாசன திட்டங்கள் மற்றும் வெள்ள நிவாரண பணிகளில் ஒத்துழைப்பு பற்றி இருவரும் முக்கியமாக விவாதித்தனர். நேபாளத்துக்கு கூடுதலாக 100 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து தரும் மின் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது, இந்தியா நேபாளம் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இவற்றில், போதை மருந்து கடத்தலை தடுப்பதில் ஒத்துழைப்பது தொடர்பான ஒப்பந்தமும் அடங்கும்.

பின்னர், மோடியும், ஷெர் பகதுர் துபாவும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, மோடி கூறுகையில், ‘நமது பாதுகாப்பு நலன்கள், ஒருவரை ஒருவர் சார்ந்து உள்ளன. எனவே, இரு நாடுகள் இடையிலான திறந்தவெளி எல்லை தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க இருநாட்டு பாதுகாப்பு படையினர் இடையே நெருங்கிய ஒத்துழைப்பு நிலவ வேண்டும்’ என்று கூறினார்.நேபாள பிரதமர் துபா கூறுகையில், ‘இந்தியாவுக்கு எதிரான எந்த காரியங்களையும் நேபாளம் அனுமதிக்காது. எல்லா விஷயத்திலும் எங்களது ஆதரவு இருக்கும்’ என்றார்