Home சம்பவம் பீர் பாட்டிலால் வாலிபரை தாக்கிய 3 பேர் கைது

பீர் பாட்டிலால் வாலிபரை தாக்கிய 3 பேர் கைது

26
0
SHARE

பூந்தமல்லி, ஆக. 26 & வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

குன்றத்தூரை அடுத்த கெலுத்திபேட்டையை சேர்ந்தவர் அஜித்குமார் (22). இவர் நேற்று மோட்டார் சைக்கிலில் அந்த பகுதியில் உள்ள சரஸ்வதி நகரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையை மறித்து 3 வாலிபர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

அவ்வழியாக  வந்த அஜித்குமார், ஏன் வழியை மறித்து நிற்கிறீர்கள். வழி விடுங்கள் என்று தெரிவித்துளார். இதனால் அவர்களுக்குள்  வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் 3 வாலிபர்களும் அங்கிருத்த பீர் பாட்டிலை எடுத்து அஜித்குமாரின் தலையில் ஒங்கி அடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.  இதில் காயம் அடைந்த அஜித்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை  அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது பற்றி குன்றத்தூர் போலீசார்  வழக்குப்பதிவு செய்து கெலுத்திபேட்டையை சேர்ந்த இனிய அரசன் (27), சிலம்பரசன் (30),  பாஸ்கரன் (28)  ஆகிய 3 பேரை கைது செய்தனர்.