Home இந்தியா சுங்க வரி அதிகரிப்பால் ஆப்பிள் போன் விலை அதிகரிப்பு

சுங்க வரி அதிகரிப்பால் ஆப்பிள் போன் விலை அதிகரிப்பு

17
0
SHARE

புதுடெல்லி, டிச. 20& இறக்குமதி செய்யப்படும் மின்னணு பொருட்களுக்கான சுங்க வரியை 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக கடந்த வாரம் மத்திய அரசு உயர்த்தியது.

இதையடுத்து ஆப்பிள் போன்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை அந்த நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது.

சுங்க வரி உயர்வுக்குப் பின்னர் விலை அதிகரிக்கும் முதல் மின்னணு சாதனம் ஆப்பிள் ஐபோன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் பெங்களூரு மையத்தில் அசெம்பிள் செய்யப்படும் ஐபோன் எஸ்இ மாடலின் விலை உயராது என்றும் ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.

இந்த விலை உயர்வு இந்தியாவில் ஆப்பிள்போன் விற்பனையில் பாதிப்புகளை உருவாக் கும் என்று எதிர்பார்க்கிறோம் என கவுண்டர் பாயிண்ட் ஆய்வு நிறுவனத்தின் மொபைல் பிரிவு கூடுதல் இயக்குநர் தருண் பதாக் கூறியுள்ளார். இந்த விலை உயர்வால் ஏற்படும் விற்பனை சரிவு காரணமாக ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தலாம் என்றும் கூறினார்.விலை உயர்வுக்கு பின்னர் ஆப்பிள் 64 ஜிபி நினைவகம் கொண்ட ஐபோன் விலை 92,430 ஆக அதிகரித்துள்ளது.

முன்னர் ரூ.89,000 இருந்தது. இதே மாடலில் 256 ஜிபி மெமரி ஐபோன் ரூ.1,05,720 ஆக உள்ளது. முன்னர் ரூ.1,02,000 ஆக இருந்தது.

64ஜிபி ஐபோன் 8 விலை ரூ.66,120 ஆகவும், 256 ஜிபி மெமரி மாடல் ரூ.79,420 ஆகவும் அதிகரித்துள்ளது. 64ஜிபி ஐபோன் 8 பிளஸ் ரூ.75,450, ஆகவும் 256ஜிபி ஐபோன் 8 பிளஸ் ரூ.88,750 ஆகவும் உயர்ந்துள்ளது.சுங்க வரி உயர்வுக்குப் பின்னர், ஐபோன்களின் விலையை அதிகரிப்பது அல்லது இந்தியாவில் அதிகமாக அசெம்பிள் செய்வது என இரண்டு வாய்ப்புகள்தான் ஆப்பிள் நிறுவனத்துக்கு உள்ளது என்று சந்தை நோக்கர்கள் கூறினர். இந்தியாவில் ஆலை அமைக்க வரிச் சலுகை உள்ளிட்ட பல சலுகைகளை அளிக்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.