Home செல்போன் இந்தியாவிலேயே முதன்முதலாக போட்டோ கிளிக்கர்ஸ் ஆப் அறிமுகம்

இந்தியாவிலேயே முதன்முதலாக போட்டோ கிளிக்கர்ஸ் ஆப் அறிமுகம்

32
0
SHARE

சென்னை, டிச.20& உயர்தரமிக்க புகைப்படக் கலைஞர்களின் சேவையைப் பயன்படுத்தும் வகையில் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவற்றிலிருந்து தரவிறக்கம் செய்யக்கூடியதாக, புதிய செயலியினை  போட்டோகிளிக்கர்ஸ் நிறுவனம்இந்தியாவில் முதன்முதலாக அறிமுகப்படுத்தியுள்ளது.

தங்கள் வாழ்க்கையின் மறக்க முடியாத எல்லாத் தருணங்களையும் நேர்த்தியாகப் படம் பிடித்து பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

புக் நவ்  மற்றும் புக் லேட்டர் ஆகிய விருப்பத் தேர்வுகளின் மூலம் வாடிக்கையாளர்கள் தமது தேவையை கைப்பேசி, கணினி மூலம் பதிவு செய்த 1 மணி நேரத்திற்குள் போட்டோ கிளிக்கர்ஸ் உரிய புகைப்பட சேவையை வழங்குவதற்கு முழுதும் தயார் நிலையில் உள்ளது. “மிக நுட்பமான எடிட்டிங், டிஜிட்டல் பிரதிகள் ஆகியவற்றை 48 மணி நேரத்திற்குள் செய்து, புகைப்பட பதிவுக்கான ஒட்டுமொத்த சேவையையும் முதல் 30 நிமிடங்களுக்கு அடிப்படை கட்டணமாக ரூ. 750 மற்றும் தொடர் சேவைக்கான ஒவ்வொரு நிமிடத்திற்கும் ரூ. 25 என்ற கட்டணத்தில் வாடிக்கையாளர்கள் பெறலாம்.

இந்தமுறையில்எடுக்கப்பட்டபடங்கள்அனைத்தையும்கிளவுட்ஸ்டோரேஜ்  மூலம் தனிப்பட்ட பாஸ்வேர்ட் பாதுகாப்புடன் 12 மாதக் காலத்திற்கு சேமித்து வைத்துக் கொள்ள முடியும். அதற்குப் பிறகு உள்ள காலத்திற்கு அப்படங்களை காப்பீடு செய்து பாதுகாப்பதற்காக குறைந்த அளவுக் கட்டணம் வசூலிக்கப்படும்,” என்று போட்டோகிளிக்கர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் முரளி குணசேகரன் தெரிவித்தார்.

தற்போது சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவை அடுத்த 12 மாதங்களில் பெங்களூரு, கோயம்புத்தூர், ஐதராபாத், புனா, மும்பை, புது டில்லி, அகமதாபாத், கொல்கத்தா, குருகிராம் ஆகிய மாநகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. பிரிமியம், ப்ரபசனல் மற்றும் பேசிக் என்ற மூன்று நிலைகளில் வாடிக்கையாளர்களின் தேவைக்குத் தக்கவாறு புகைப்படச் சேவை அதிகாலை 5 மணியிலிருந்து நள்ளிரவு வரை அளிக்கப்படும்.