Home அரசியல் குஜராத், இமாசலத்தைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் பா.ஜ.க. வெற்றி பெறும் எடியூரப்பா நம்பிக்கை

குஜராத், இமாசலத்தைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் பா.ஜ.க. வெற்றி பெறும் எடியூரப்பா நம்பிக்கை

14
0
SHARE

பெங்களூரு, டிச. 20& குஜராத், ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலிலும் பா... வெற்றி பெறும் என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் உள்ள பா... தலைமை அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: குஜராத்,, ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றி நாடெங்கும் உள்ளபா..கவினருக்குஉற்சாகத்தையும்மகிழ்ச்சியையும்அளி.ஆளுங்கட்சிக்குஎதிரான அலையை முறியடித்து குஜராத்தில் பா...வுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

மேற்கு வங்கத்துக்குப் பின்னர், குஜராத்தில்தான் ஒரே கட்சி (பா..) அதிக காலம் ஆட்சிபுரிந்துவருகிறது.மேற்கு வங்கத்தில் ஜோதிபாசுவின் மறைவுக்கு பின்னர், கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு குறைந்தது. ஆனால் முதல்வர் பதவியில் இருந்து விலகிய மோடி பிரதமராக பதவியேற்ற பிறகும், குஜராத்தில் பா..கவின் செல்வாக்கு சரியவில்லை. பிரதமர் நரேந்திர மோடி, பா..க மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதையே இதுகாட்டுகிறது.

வளர்ச்சியின்மீதுநம்பிக்கைவைத்ததால்தான் 6ஆவது முறையாக குஜராத்தில் பா..க வென்றுள்ளது. காங்கிரஸின் ஜாதி அரசியலுக்கு குஜராத் மக்கள் தக்கப் பாடம் புகட்டியுள்ளனர். ஹிமாச்சலப் பிரதேசத்திலும் காங்கிரஸ் தோற்றுள்ளது.பிரதமர் மோடியின் தகுதி வாய்ந்த தலைமைக்கு மாற்றாக காங்கிரஸை நிலைநிறுத்துவதில் ராகுல் காந்தி தோல்வி அடைந்துள்ளார். குஜராத்தைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் 2018ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலில் 150 தொகுதிகளில் பா..க வெற்றி பெற்று அறுதிபெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும்.

மோடி, பா..க தேசியத் தலைவர் அமித்ஷாவின் விருப்பத்துக்கிணங்க காங்கிரஸ் இல்லா இந்தியாவை உருவாக்குவோம். இதில் 100 சதவீதம் நம்பிக்கை இருக்கிறது.புதிய கர்நாடகத்தை கட்டமைப்பதற்காக நவம்பர் 2ஆம் தேதி முதல் மாற்றத்துக்கான பயணத்தை பா..க நடத்திவருகிறது. குஜராத் வெற்றி பா..கவின் பயணத்தை உற்சாகமாக்கும். பயணத்தின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவிருக்கிறார்.பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதையே இரு மாநில தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன. தேர்தல் வெற்றிக்கு மோடி, அமித்ஷாவின் உழைப்பே காரணமாகும்.மின்னணு வாக்கு இயந்திரத்தில் சந்தேகம் இருப்பதாக முதல்வர் சித்தராமையா கூறிவருகிறார்.

இதுபோன்றபிற்போக்கானகருத்துகளைகூறுவதைசித்தராமையாநிறுத்தவேண்டும். இதே மின்னணு வாக்கு இயந்திரத்தில்தான் காங்கிரஸ§ம் வென்றுள்ளது.இரு மாநில தேர்தல் முடிவு அதிருப்தியை தரவில்லை என்று ராகுல் காந்தி கூறியிருப்பது அவரின் சிந்தனைப் போக்கை வெளிப்படுத்துகிறது என்றார் அவர்.