Home தமிழகம் மாரத்தான் போட்டியில் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவி முதலிடம்

மாரத்தான் போட்டியில் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவி முதலிடம்

20
0
SHARE

சென்னை, டிச. 19& மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவி முதலிடம் பிடித்தார்.

மீள் பசுமை நகரமாக சென்னையை உருவாக்குவதற்காக மாரத்தான் ஓட்டப்பந்தயம் ஒன்றினை கனரா வங்கி ஏற்பாடு செய்திருந்தது. இப்போட்டியில் பல்வேறு வயதினர் கலந்து கொண்டனர். சுமார் 1500 போட்டியாளர்கள் கலந்து கொண்ட மாரத்தான் போட்டி சென்னை மத்யகைலாஷ் பகுதியில் ஆரம்பித்து 5 கி.மீட்டர் தூரத்தைக் கடந்து மீண்டும் அதே பகுதியினை வந்தடைவதாக அமைந்தது.

இந்த போட்டியில் திறமையாக ஓடிய மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி மீனாட்சி வெற்றிப் பெற்று முதல் பரிசினைத் தட்டிச் சென்றார். மாணவி மீனாட்சிக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

போட்டியாளர்கள் அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழ்கள் மற்றும் டி&சார்ட்டுகள் வழங்கப்பட்டன.  சென்னை நகருக்கு மீள் பசுமையை ஏற்படத்தித்தர விளைந்திருக்கும் இப்போட்டியில் வேலம்மாள் பள்ளி மாணவியின் வெற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் பெருமை மிகு நிகழ்வாகவும் அமைந்தது.