Home அரசியல் குஜராத்தில் 6 மையங்களுக்கு இன்று மறுவாக்குப்பதிவு

குஜராத்தில் 6 மையங்களுக்கு இன்று மறுவாக்குப்பதிவு

20
0
SHARE

ஆகமதாபாத், டிச. 17&

குஜராத்தில் 6 மையங்களுக்கு இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

குஜராத் மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக கடந்த 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து வருகிற 18ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள 6 மையங்களுக்கு மறுவாக்குப்பதிவு நடத்தப்போவதாக தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதாவது: குஜராத் தேர்தலின் போது 6 மையங்களில் நடத்தப்பட்ட தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. இங்குள்ள இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவின் போது பதிவான வாக்குகளை நீக்க அங்கு பணியில் இருந்த தேர்தல் அதிகாரிகள் மறந்துவிட்டனர்.

எனவேஇங்குநடத்தப்பட்டதேர்தல்ரத்துசெய்யப்படுகிறது. இதையடுத்து டிசம்பர் 17& ந் தேதி (இன்று) இம்மையங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த திட்டமிட்டுள்ளோம். கவனக்குறைவாக செயல்பட்டு தவறு செய்த அதிகாரிகள் மீது நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.