Home சிறப்புச் செய்திகள் ஆய்வாளர் பெரியபாண்டி கொலை:சி.பி.ஐ. விசாரணைக்கு வழக்கு

ஆய்வாளர் பெரியபாண்டி கொலை:சி.பி.ஐ. விசாரணைக்கு வழக்கு

46
0
SHARE

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில், காவல்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், பார்வையாளர்கள் பின்னணியுடன் ஒரு வாக்குக்கு ரூ6000/ என அ.தி.மு.க சுமார் ஒரு இலட்சம் பேருக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால் நேற்று அதாவது டிசம்பர் 16ம் தேதி  காலை முதல் தி.மு., டி.டி.வி தினகரன் அணியினர் ஆர்ப்பாட்டம், சாலைமறியல் செய்து வருகிறார்கள்

ஆனால்எதைப்பற்றியும்தேர்தல்ஆணையர்கவலைப்படவில்லை. ஆர்.கே.நகர் பக்கம், தேர்தல் பார்வையாளர் தலையை காட்டவில்லை. இந்தியாவிலேயே ஆர்.கே நகர் தான் வித்தியாசமான தேர்தல் நடக்கிறது. வாழ்க!!ஜனநாயகம்!!வாழ்க பண நாயகம் என்று மெதுவாக தாத்தா, இளைஞர்கள் கோஷம் போட்டார்கள்.

அனேகமாக ஆர்.கே இடைத்தேர்தல் மீண்டும் தள்ளி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற கொசுறு செய்தியுடன் அடுத்த செய்திக்கு சென்றார் தாத்தா.

அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பிரதாப் ரெட்டி, ஆறுமுகசாமி கமிஷனில் ஆஜராகி, ஜெயலலிதா, சுய நினைவின்றி, ஆபத்தான நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். மக்கள் மத்தியில் கலவரம் ஏற்பட்டுவிடும் என்று நாங்கள் வெளியே சொல்லவில்லை என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.அடப்பாவிகளா.!!

தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியை நவம்பர் 15ம் தேதி இரவு அறிவாலாயம் அழைத்து வந்தார்கள்.. அறிவாலாயம் பதிவேட்டில் மு.கருணாநிதி என்றுகையெழுத்து போட்டார். ஆர்.கே தேர்தல் பிரச்சாரம் முடியும் 19ம் தேதி மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலைஞரை மேடையில் உட்காரவைத்து, ஆதரவு திரட்ட ஆலோசனை நடந்து வருகிறது.

வீரமரணம் அடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், பெரியபாண்டியனின் இறுதிச் சடங்கில், நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆளுங்கட்சி, எம்.பி,  எம்.எல்..,க்களில் ஒருவர் கூட பங்கேற்கவில்லை. அனைவரும், ஆர்.கே.நகரில் முகாமிட்டு உள்ளனர். மேலும் பெரிய பாண்டி மரணத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.

ஆய்வாளர் பெரியபாண்டியை, கொள்ளையன் நாதூரம் சுட்டு கொல்லவில்லை. பெரம்பூர் ஆய்வாளர் முனிசேகர் துப்பாக்கியால் சுட்ட போது, குண்டு பெரியபாண்டி மீது பாய்ந்துவிட்டது. இது வரை முனிசேகர் அவருடன் காவல்துறையினர் போட்டோக்களை வெளியிடவில்லை..

ராஜஸ்தான்மாநிலகாவல்துறையினர்பெரியபாண்டிஉடலில்இருந்தகுண்டு, முனிசேகர் துப்பாக்கியில் இருந்து வந்துள்ளது என்று உறுதிப்படுத்தியுள்ளார்கள்.. இப்படி பெரியபாண்டி மரணத்தில் சர்ச்சைகள் இருப்பதால், நவம்பர் 16ம் தேதி நடக்க இருந்த இரங்கல் கூட்டம், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுள்ளது..

சங்கரன்கோவில் தொகுதி, .தி.மு..,  எம்.எல்.., ராஜலட்சுமி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக  உள்ளார். அதனால்  பெரியபாண்டியன் உடலுக்கு, சென்னையில் அஞ்சலி செலுத்தி, ஆர்.கே.நகர் தொகுதி பிரசாரத்திற்கு சென்று விட்டார். அவரது தொகுதியில் நடந்த இறுதிச் சடங்கில் பங்கேற்கவில்லை.  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதிகளில், ஐந்து, .தி.மு.., வசம் உள்ளது.

திருநெல்வேலி, தென்காசி தொகுதி, எம்.பி.,க்களாக, பிரபாகரன், வசந்தி முருகேசன், ராஜ்யசபா, எம்.பி.,க்களாக, விஜிலா சத்யானந்த், முத்துக்கருப்பன் என, நால்வர் உள்ளனர். இவர்களில் ஒருவர் கூட, பெரியபாண்டியன் இறுதிச் சடங்கில் பங்கேற்கவில்லை. இவர்கள் அனைவரும், ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில், .தி.மு.., வெற்றிக்காக, களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பெரியபாண்டியன் உறவினர்கள் மற்றும் நெல்லை மாவட்ட மக்கள், .தி.மு..,வினர் மீது அதிருப்தியில்  உள்ளனர்.

மேலும் கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளை தொடர்பாக கொள்ளையர்களை பிடிக்க, மதுரவாயல் காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டி ஏன் செல்ல வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இப்படி சர்ச்சையில் சிக்கியுள்ள பெரியபாண்டியனின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கேட்டு, வழக்கு தொடர சிலர் முயற்சி செய்து வருகிறார்கள்ஞ் என்று மூச்சுவிடாமல் தகவலை சொல்லிவிட்டு, தாத்தா.ஆர்.கே நகருக்கு புறப்பட்டார்.