Home தமிழகம் டிராபிக்ராமசாமி திடீர் உண்ணாவிரதம்

டிராபிக்ராமசாமி திடீர் உண்ணாவிரதம்

18
0
SHARE

சென்னை, ஆக. 26& சென்னை பிராட்வே பகுதியில் டிராபிக் ராமசாமி திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை பிராட்வே, பிரகாசம் சாலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அலுவலகம் உள்ளது. நேற்று காலை 9 மணி முதல் அவர் தனது அலுவலகத்தில் திடீர் உண்ணாவிரதம் இருந்தார். இது குறித்து, அவர் கூறியதாவது;

தமிழகத்தில் பெரும்பான்மை இல்லாத அரசு நடக்கிறது. எடப்பாடி பழனிசாமி தாமாகவே முன்வந்து பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. ஜனநாயகத்துக்கு விரோதமாக குதிரை பேரம் நடக்கிறது. இந்த ஆட்சி உடனே அகற்றப்பட வேண்டும்.

இன்னும் 24 மணி நேரத்தில், இந்த ஆட்சியை கலைக்க வேண்டும். இல்லாவிட்டால் தலைமை செயலகம் அல்லது கவர்னர் மாளிகை முன்பு எனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்வேன் என்றார். அவர், அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.