Home சிறப்புச் செய்திகள் தாய்பாலின் முக்கியத்துவம்

தாய்பாலின் முக்கியத்துவம்

16
0
SHARE

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது பற்றி தாய்மார்களிடம் கேட்டால் தாய்ப்பால் கொடுக்கிறேன் என்பார்கள். தாய்ப்பால் மட்டுமே கொடுக்கிறீர்களா என்றால் இல்லை என்பார்கள். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுத்தல், தாய்க்கு முதலில் சுரக்கும் பாலான சீம்பாலை கொடுத்தல், அதன் நன்மைகள், தாய்ப்பால் மட்டுமே 6 மாதம் வரை கொடுக்க வேண்டியதின் அவசியம் போன்றவை குறித்து இன்றைய பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.

ஏனெனில், பிறந்த குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளது. தாய்ப்பால் கொடுப்பதற்கு பதிலாக வேறு உணவோ, தண்ணீரோ கொடுக்கும் போது குழந்தைக்கு தாய்ப்பாலிலிருந்து கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்து கிடைக்காமல் அதன் வளர்ச்சி தடைபடுகிறது. எதிர்ப்பு சக்தி குறைகிறது. குழந்தை நோய்வாய்படுதல் அதிகமாகிறது. குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாவதற்கு அவர்களின் ஊட்டச்சத்து குறைபாடும் ஒரு முக்கிய காரணமாகும்.  ஊட்டச்சத்து குறைபாடுடன் வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் ஆரோக்கியம் குன்றியவர்களாகத்தான் வளர்வார்கள். இவர்களால் வீட்டிற்கும், நாட்டிற்கும் தங்களது கடமைகளை முழுத் திறனுடன் செய்ய இயலாது. இதைத் தவிர்க்கவும். ஆரோக்கியமான எதிர்கால சந்ததியினரை உருவாக்கவும் அரசாங்கம் தாய்ப்பாலின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.

‘‘தாய்ப்பால் கொடுப்பது தாயின் கடமை தாய்ப்பால் பெறுவது குழந்தையின் முதல் உரிமை’’ இதை மறுக்க தாய்க்கோ, தந்தைக்கோ உரிமை இல்லை. குடும்பதினர் இதற்கு ஆதரவாக இருக்க வேண்டும். குழந்தை பிறந்தவுடன் ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் . ஒவ்வொரு குழந்தைக்கும் அந்த குழந்தை பிறந்த, முதல் ஒரு மணி நேரம் ‘‘தங்கமான நேரம்’’ (ரீஷீறீபீமீஸீ லீஷீuக்ஷீ) ஆகும். ஏனெனில், இந்த நேரத்தில் குழந்தை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். போது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும்போது குழந்தை உறிஞ்சி குடிக்க கற்றுக்கொள்கிறது.

தாய்க்கும் பால் சுரக்கும் சுரப்பிகள் நன்கு தூண்டப்பட்டு பால் நன்கு சுரக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். சிசேரியன் மூலம் குழந்தை பிறந்திருந்தால் 4 முதல் 6 மணி நேரத்திற்குள் அல்லது தாய்க்கு மயக்கம் தெளிந்தவுடன் பால் புகட்ட ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனின் வளர்ச்சிக்கும் அடித்தளமாக இருப்பது முதல் வருட வளர்ச்சி. அந்த வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும்  நிறைந்தது தாய்ப்பால் மட்டுமே. இந்த தாய்ப்பால் குழந்தைக்கு தேவையான அளவு கிடைக்காதபோது, அந்த குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும். இந்த ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சி பாதிப்பை (மிஸிஸிணிறிகிஸிகிஙிலிணி) திரும்ப சரி செய்வது என்பது முடியாததாகும்.

பிறந்தவுடன் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுப்பதால் சிறு குழந்தைகளின் இறப்பு விகிதத்தை பெருமளவில் குறைக்கலாம். பிறந்த குழந்தைகள் தாய்க்கு அருகிலேயே இருக்கும்போது குழந்தைக்கு தேவையான கதகதப்பு (கீகிஸிவி) கிடைக்கும். இந்த கதகதப்பு எடை குறைவாக அல்லது குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மிக மிக அவசியமாகும். (பிறந்த குழந்தையின், சிறப்பான ஆரோக்கியத்திற்கு அடித்தளமாக இருப்பது தாய்ப்பால் மட்டுமே. தாய்ப்பாலுக்கு இணையான உணவோ, மாற்று உணவோ எதுவுமே கிடையாது. ஒவ்வொரு தாயும் தன் குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டும்தான் கொடுக்க வேண்டும். வேறு உணவை யோசிக்கவே கூடாது.)

சீம்பாலின் முக்கியத்துவம்

குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு முதலில் சுரக்கும் பால் சீம்பால் (சிளிலிளிஷிஜிஸிஹிவி) எனப்படும். சீம்பால் மஞ்சள் நிறமாக, பிசுபிசுப்பாக, கெட்டியாக இருக்கும். சீம்பாலில் குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்து மற்றும் தண்ணீரும் இருக்கிறது. இதில், கண்பார்வைக்குத் தேவையான வைட்டமின்சத்து அதிக அளவில் உள்ளது. சீம்பாலில் வெள்ளை அணுக்கள் அதிகளவில் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்துள்ளது. அதனால் இது நோய் தொற்றிலிருந்து குழந்தையை பாதுகாக்கும். இதில் புரோட்டீன் சத்து நிறைந்துள்ளது. எளிதில் ஜீரணமாகக்கூடிய, குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான கொழுப்புச்சத்து உள்ளது. குழந்தைக்கு மஞ்சள் காமாலை வராமல் தடுக்கிறது. பிறந்த சில வாரங்களில் குழந்தைக்கு ஏற்படக்கூடிய வயிற்றுப்போக்கு போன்ற நோய்களில் இருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது. (தாய்மார்கள் சீம்பால் அசுத்தமானது. ஜீரணமாகாது என்று கருதி வெளியேற்றி விடுகின்றனர். இது குழந்தைக்கு அவர்கள் செய்யும் பெரிய கெடுதல் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.)

தாய்ப்பாலின் முக்கியத்துவம்

6 மாதம் வரை குழந்தைக்கு ‘‘தாய்ப்பால் மட்டுமே’’ என்பது குழந்தைக்கு வேறு எந்த விதமான பால், உணவு மற்றும் தண்ணீர் கூட கொடுக்காமல் தாய்ப்பால் மட்டுமே குழந்தைக்கு ஆறுமாதம் வரை கொடுப்பதேயாகும். முதல் ஆறு மாதங்களுக்கு ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளது. கோடை காலத்தில் கூட குழந்தைக்குத் தேவையான தண்ணீர் தாய்ப்பாலில் உள்ளது. அதனால் தண்ணீர் கூட முதல் ஆறு மாதம் குழந்தைக்கு தர வேண்டியதில்லை. தாய்ப்பாலைத் தவிர வேறு வகையான உணவை ஒரு முறை கொடுத்தால் கூட இரண்டு தீமைகள் ஏற்படும். முதல் உணவாக வேறு உணவை உட்கொண்டபின் குழந்தைக்குத் தாய்ப்பாலைக் கொடுத்தால் குறைவாகவே குடிக்கும். அதனால், அந்த வேளை தாய்ப்பாலில் இருந்து கிடைக்கவேண்டிய ஊட்டச்சத்து கிடைக்காமல் குழந்தைக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படும். தாய்ப்பால் சுரப்பதும் குறைந்து விடும்.

இரண்டாவதாக, வேறு உணவினால் கிருமி தொற்று ஏற்பட்டு, வளர்ச்சியை பாதிக்கும். உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.

குழந்தைக்கு பால் புகட்டும் சரியான நிலை:

குழந்தையின் தாடை மார்பகத்தைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். குழந்தையின் வாய் அகலமாக நன்கு திறந்திருக்க வேண்டும். குழந்தையின் கீழ் உதடு வெளிப்புறமாக திரும்பி இருக்க வேண்டும். மார்பகத்தின் கருமைப் பகுதி குழந்தையின் வாயிக்குள் இருக்க வேண்டும். பால் சுரக்கும் சுரப்பிகளில் உள்ள கருமை நிற பகுதியை குழந்தை அழுத்தி சப்பிக் குடிக்கும் போதுதான் தாய்ப்பால் வெளியே வரும்.

மார்பகக்காம்பை மட்டும் குழந்தை சப்பும் போது பால் வராது. குழந்தை தாயிடம் ஒவ்வொரு முறையும் பால் குடிக்கும் போது உடனே சுரக்கும் பால் முதல் பால் எனப்படும். இதற்கு பிறகு சுரக்கும் பால் ‘‘ஹைன்ட் பால்’’(லீவீஸீபீ னீவீறீளீ)  எனப்படும். இதில் இரண்டிலுமே குழந்தைக்கு சக்தியையும், வளர்ச்சியையும் கொடுக்கக்கூடிய எளிதில் ஜீரணமாகக்கூடிய சத்துக்கள் உள்ளது. எனவே, தாய் ஒவ்வொரு முறை குழந்தைக்கு பால் கொடுக்கும்போதும் ஒரு பக்கம் முழுமையாக கொடுத்து விட்ட பிறகு தான் அடுத்த பக்கம் பால் கொடுக்க வேண்டும். ஒரு பக்கம் பால் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே, பாதியிலேயே அடுத்த பக்கம் பால் கொடுக்கும்போது குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான கொழுப்புச் சத்து நிறைந்த ஹைன்ட் பால் கிடைக்காமல் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

தாய்மார்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

பிறந்த குழந்தையை, தாயின் அணைப்பில் வைக்க வேண்டும். இதில் கிடைக்கும் கதகதப்பு குழந்தைக்கு அவசியம். பிறந்த குழந்தை முதல் ஒரு மணி நேரம் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். அப்போது தாய்ப்பால் கொடுத்தால்தான் குழந்தைக்கு உறிஞ்சி குடிக்கும் திறனும், தாய்க்கு தாய்ப்பால் சுரப்பதும் தூண்டப்படும். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால்  கொடுக்க வேண்டும். தாய்க்கு முதலில் சுரக்கும் பாலான சீம்பாலை சிறிதும் வீணாக்காமல் குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.

சீம்பால், குழந்தையை நோய்கள் தாக்காமல் பாதுகாக்கிறது. குழந்தையின் அரோக்கியமான வளர்ச்சிகான அனைத்து ஊட்டச்சத்துக்களும், எதிர்ப்பு சக்தியும் தாய்ப்பாலில் மட்டுமே இருப்பதால் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தண்ணீர் கூட தேவையில்லை. பாலோ, பிற உணவோ தேவையில்லை.

தாய்ப்பால், குழந்தையின் மூளை வளர்ச்சியை மேம்படுத்துகிறது. தாய்ப்பால், குழந்தைக்கு நிமோனியா, வயிற்றுப்போக்கு, ஆஸ்துமா போன்ற நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. ஆதனால், மருத்துவமனைக்கு செல்லும் அலைச்சல் இருக்காது.

தொற்றா நோய்களான நீரிழிவு, இரத்த அழுத்தம் வருவதையும் தாய்ப்பால் குறைக்கிறது. ‘‘என் குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டும்தான் கொடுப்பேன்’’ என்பதில் தாய்மார்கள் உறுதியாய் இருக்க வேண்டும். 6 மாதத்திற்கு பிறகு தாய்ப்பாலுடன் பிற உணவுகளை கொடுக்க வேண்டும்.

2 வயது வரை தொடர்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு எப்போதெல்லாம் பசிக்கிறதோ அப்போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குறைந்தது ஒரு நாளைக்கு(பகலும் மற்றும் இரவிலும் சேர்த்து) 8 அல்லது 12 முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அனைத்து தாய்மார்களுக்கும் அவர்களின் குழந்தைக்கு நன்றாக தாய்ப்பால் கொடுக்க முடியும். கணவர் மற்றும் குடும்பத்தினர் தாய்க்கு ஆதரவாக இருக்க வேண்டும். தாய்ப்பாலை உறிஞ்சி குடிக்க இயலாத, எடை குறைந்த அல்லது நோயுற்ற குழந்தைகளுக்கு அல்லது வேலைக்கு செல்லும் தாய்மார்கள், தாய்ப்பாலை எடுத்து சுத்தமான கிண்ணத்தில் வைத்து சங்கு அல்லது ஸ்பூனில் குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.

உலகில் உள்ள பாலூட்டி இனங்கள் அனைத்தும் தன்னுடைய குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தொடர்ந்து கொடுக்கின்றன. அதற்கு யாரும் அறிவுறுத்தவோ, விழிப்புணர்வு ஏற்படுத்தவோ செய்வதில்லை. அவைகளுக்கு அவற்றின் முக்கியத்துவம் தெரிந்துள்ளது. மனித இனத்திலும் நம் முன்னோர்கள் தாய்ப்பாலின் முக்கியத்துவம் அறிந்து குழந்தைகளுக்கு தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று வருடங்கள் வரை தாய்ப்பாலை கொடுத்துள்ளனர்.

ஆனால் தற்போது, மாறி வரும் வாழ்க்கை சூழல், பெண்கள் வேலைக்கு செல்வது, குடும்ப பொறுப்புகள், தனிக்குடும்பம், நாகரீகம் என பல காரணங்களால் குழந்தை நலம் மற்றும் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.