Home இந்தியா தெலுங்கானாவில் பயங்கரதுப்பாக்கிசண்டை 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

தெலுங்கானாவில் பயங்கரதுப்பாக்கிசண்டை 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

19
0
SHARE

கோதகுடேம், டிச. 15&

தெலுங்கானாவில் நேற்று காலை பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தெலுங்கானாவின் பத்ராத்ரி கோதகுடேம் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடமாடுவதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததது

இதையடுத்து தேகுலபள்ளி என்ற கிராமத்தில் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தினர்.

அந்த கிராமத்தில் மொத்தம் 17 மாவோயிஸ்டுகள் முகாமிட்டிருந்தனர். பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்ததைத் தொடர்ந்து மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்த தொடங்கினர். இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடந்தது. இம்மோதலில் மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். 9 பேர் தப்பி ஓடினர்.

சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகள் நலகொண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் ஆந்திரா ஒடிசா எல்லைகளில் பதுங்கி இருந்தனர். அதன் பின்னர் கம்மம், வாரங்கல் மாவட்டங்களில் பதுங்கி பாதுகாப்பு படையினருக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வந்தனர்.