Home தமிழகம் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவு 26 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வருகிறார்

பேரறிவாளனுக்கு பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவு 26 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வருகிறார்

52
0
SHARE

சென்னை, ஆக. 25& பேரறிவாளனுக்கு பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து 26 ஆண்டுகளுக்கு பிறகு அவர் வெளியே வருகிறார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991 ம் ஆண்டு மே 21ந் தேதி மனித வெடிகுண்டு மூலம் ஸ்ரீபெரும்புதூரில்  கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் நளினி, முருகன் மற்றும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்களுக்கு முதலில் தூக்கு தணடனை விதிக்கப்பட்டது. பின்னர் மேல் முறையீட்டில் தூக்கு தண்டனையானது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

ஆனால் ஏறக்குறைய 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடி வரும் அவரை விடுதலை செய்யக் கோரி அவரது தயார் அற்புதம்மாள் தமிழக அரசிடம் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தார். அல்லது குறைந்த பட்சம் பரோலிலாவது விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தார். இதனை அனைத்து கட்சித்தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர். பேரறிவாளன் தந்தை உடல்நலக் குறைவால் வாடுவதால் பேரறிவாளனுக்கு பரோல் அளிக்க வேண்டும் என்று அரசிடம் அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை  வைக்கப்பட்டது.

இந்நிலையில் பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு தற்பொழுது உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து கூடுதல் தலைமைச் செயலாளரும், உள்துறைத் செயலாளருமான நிரஞ்சன் மார்டி வேலூர் சிறைத்துறை துணை காவல் காண்காணிப்பாளருக்கு எழுதியுள்ள கடித்தில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை 30 நாட்கள் பரோலில் அவரது தந்தை குணசேகரன் உடல்நிலை சரியில்லாததால் விடுக்க வேண்டும் என அவரது தாய் அற்புதம் கோரிக்கை விடுத்துள்ளார். அதன் அடிப்படையில் அரசு தலைமை வழக்கறிஞர் அளித்த கருத்துகளை ஆராய்ந்து பேரறிவாளனுக்கு 1 மாதம் விடுமுறை அளிக்கலாம் என தெரிவித்துள்ளார். இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு வேலூர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அது கிடைத்தவுடன் அவர் உடனடியாக விடுவிக்கப்படுவார் என்று தெரிகிறது. இந்த தகவலை நேற்று செய்தியாளர்களிடம் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.